Automobile Tamilan

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி அறிமுகம்

ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்று ரைடிங் மோட் பெற்ற புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் மாடல் விற்பனைக்கு ரூ.1.31 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலை விட மிக சிறப்பான ரைடிங்கை மேற்கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ள ரைடிங் மோடுகள் மிகப்பெரிய அளவில் ரேசிங் ஆர்வத்தை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ரைடிங் மோட்

மிக சிறப்பான ரேசிங் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளது. ரேடிங் மோடிற்கு ஏற்ப ஏபிஎஸ் டீயூன் செய்யப்பட்டுள்ளது.

ஸ்போர்ட் : மிக சிறப்பான ரைடிங் திறனை பெற்று அதிகபட்ச வேகத்தை வழங்குகின்ற ஸ்போர்ட் மோடில், குறைவான ஏபிஎஸ் ஆளுமை கொண்டிருந்தாலும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பிரேக்கிங் செயல்திறன் கொண்டிருக்கும்.

அர்பன் : அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை வழங்குகின்ற அர்பன் மோடில் சிறப்பான பவர் வழங்குவதுடன், ஏபிஎஸ் செயல்திறன் சிறப்பாக அமைந்திருக்கும்.

ரெயின் : மிக முக்கியமாக அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் வழங்கப்பட்டுள்ள ரெயின் மோடில் குறைவான வேகத்துடன் சிறப்பான பிரேக்கிங் செயல்திறனை வழங்க அதிகபட்ச ஏபிஎஸ் ஆளுமை பெற்றிருக்கும்.

இந்த மோடுகளை மாற்றுவதற்கு பிரத்தியேக ரைடிங் சுவிட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய அப்பாச்சி 200 பைக்கில் முன்புற சஸ்பென்ஷன் அமைப்பில் ஷோவா அட்ஜெஸ்டபிள் ப்ரீ லோடு சஸ்பென்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மூன்று விதமான அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான கிளட்ச் மற்றும் பிரேக் லிவர்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலில் 197.75 சிசி ஒற்றை சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 8500 ஆர்.பி.எம்மில் 20.5 பிஎஸ் சக்தியையும் 7500 ஆர்.பி.எம்மில் 16.8 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதீக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் குறைவான வேகங்களில் சிறப்பான ரைடிங் அனுபவத்தினை வழங்க GTT (Glide Through Traffic) பெற்றதாக வந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு டிவிஎஸ் SmartXonnect மூலம் இணைத்துக் கொள்ளுவதன் மூலம் குறுஞ்செய்தி, அழைப்புகள் போன்ற அறிவிப்புகள், ஓவர் ஸ்பீடு அலெர்ட், டீரிப் மீட்டர், பார்க்கிங் இருப்பிடம், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கிராஸ் அலெர்ட் மற்றும் அதிகபட்ச வேகத்தை பதிவு செய்வதுடன் ஹெல்மெட் ரிமைன்டரை கொண்டுள்ளது.

web title : 2020 TVS Apache RTR 200 4V Gets Ride Modes

Exit mobile version