Automobile Tamilan

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

டிவிஎஸ் அப்பாச்சி RTX 300

டிவிஎஸ் மோட்டாரின் புதிய RT-XD4 299cc என்ஜின் பொருத்தப்பட்ட முதல் மாடலாக அப்பாச்சி RTX 300 அட்வென்ச்சர் டூரிங் பைக்கினை அக்டோபர் 15 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே, இந்நிறுவனம் டிசைனை காப்புரிமை பெற்றுள்ள நிலையில், பாரத் எக்ஸ்போவில் படங்களும் கசிந்துள்ளது.

TVS Apache RTX 300

அப்பாச்சி வரிசையில் ஏற்கனவே ஃபேரிங் மற்றும் ஸ்போர்ட்டிவ் பிரிவில் 160சிசி-310சிசி வரையில் கிடைக்கின்ற நிலையில் அட்வென்ச்சர் டூரிங் என்ற புதிய அவதாரத்தை எடுக்க உள்ளது. மிக வலுவான பிராண்டின் நம்பிக்கையை கொண்டுள்ள அப்பாச்சி வரிசையில் புதிய சாதனையாக அமையலாம்.

ஆர்டிஎக்ஸ் 300 பைக்கில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டட RT-XD4 299.1cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,000 rpmல் 35hp பவர் மற்றும் 7,000 rpmல் 28.5 Nm வெளிப்படுத்துகின்றது. இந்த எஞ்சினில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், ரைடு-பை-வயர் த்ரோட்டில் சிஸ்டம், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்றதாக அமைந்திருக்கும்.

முன்பாக வெளியான படங்களில் இந்த ஆர்டிஎக்ஸில் கோல்டன் நிறத்தை கொண்ட அப்சைடு டவுன் ஃபோர்க்கு சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் அமைந்துள்ள அப்பாச்சி  RTX300 பைக்கில் டிஸ்க் பிரேக்குடன் முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல வீல் பெற்றாலும் அலாய் வீல் பெற்றுள்ளது.

ஆஃப் ரோடு சார்ந்த அனுபவங்களை விட கூடுதலாக நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்ற வகையிலான டிசைனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய  ரூ.2 லட்சத்துக்குள் துவங்கலாம்.

Exit mobile version