Automobile Tamilan

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரூ.22,000 வரை உயர்ந்தது

iqube escooter

பிரசத்தி பெற்ற ஐக்யூப் எல்க்ட்ரிக் ஸ்கூட்டரின் மாடலின் விலை ரூ.17,000 முதல் ரூ.22,000 வரை உயர்த்தப்படுவதாக டிவிஎஸ் மோட்டார்  அறிவித்துள்ளது. விலை உயர்வு வேரியண்ட் வாரியாக உறுதியாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை.

ஃபேம் திட்டத்தின் மானியம் ஒரு Kwh பேட்டரிக்கு ரூ.10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இது ஒரு Kwh பேட்டரிக்கு 15,000 ஆக இருந்தது.

2023 TVS iQube Price

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேஎன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், அடுத்த சில காலாண்டுகளில் FAME II மானியம் படிப்படியாக குறையும். டிவிஎஸ் மோட்டார்,  நம் நாட்டில் இரு சக்கர வாகனங்களில் மின்மயமாக்கல் மற்றும் பசுமை ஆற்றல் ஊடுருவலை அதிகரிப்பதற்கு மகிழ்ச்சிகரமான தயாரிப்பு விருப்பங்களையும் சிறந்த மதிப்பு முன்மொழிவினை தொடர்ந்து வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

டிவிஎஸ் மோட்டாரின் FAME II  திருத்தத்திற்குப் பிறகு செலவுச் சுமையைக் குறைக்க, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, மே 20, 2023 வரை முன்பதிவு செய்த iQube வாடிக்கையாளர்களுக்கு லாயல்டி நன்மைத் திட்டத்தை வழங்க உள்ளது. கூடுதலாக, ஜூன் 1, 2023 முதல் புதிய வாடிக்கையாளர்கள் புதிய விலையை பெறுவர்.

ஐக்யூப் மாடலில் தற்பொழுது iqube ஸ்கூட்டரின் பேஸ் வேரியண்ட் மற்றும் S வேரியண்டில் 3.04Kwh பேட்டரியை  ஒருமுறை சார்ஜ் செய்தால் ஈக்கோ மோடில் 100 கிமீ வரம்பை வழங்குகிறது.

நிகழ்நேரத்தில் இரண்டு வேரியண்டுளும் 75 முதல் 80 Km ரேஞ்சு வழங்கும் நிலையில் பவர் மோடில் அதிகபட்சமாக 55-60Km வழங்குகின்றது. இந்த மாடல்களின் டாப் ஸ்பீடு 78Km/hr ஆகும். இந்த இரு மாடல்களிலும் 650 வாட்ஸ் சார்ஜர் கொண்டு 0-80 % சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.

Exit mobile version