Automobile Tamilan

புதிய நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் XP வெளியானது

tvs ntorq 125 race xp blaze blue

என்டார்க் 125 ஸ்கூட்டரில் உள்ள அதிக பவர் வழங்கும் ரேஸ் XP வேரியண்டில் முந்தைய மெரைன் ப்ளூ நீக்கப்பட்டு ரேசிங் ப்ளூ என்ற நிறம் கொடுக்கப்பட்டு விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது.

என்டார்க்கில் உள்ள 125சிசி என்ஜின் 124.8cc எஞ்சின் 3 வால்வுகளை பெற்று ரேஸ் எக்ஸ்பி மாடல்  ISG (Integrated Starter Generator) வசதியை பெற்றுள்ளதால் 10.2PS பவர் மற்றும் டார்க் 10.8Nm ஆக உள்ளது. மற்றவை 9.38Ps @ 7000 rpm-ல் மற்றும் டார்க் 10.5Nm @ 5,500rpm ஆக உள்ளது. பொதுவாக சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

மற்ற வேரியண்டுகளை விட கூடுதல் பவர் மட்டுமல்லால் சிவப்பு நிற அலாய் வீல் பெற்று வேறுபடுத்தி காட்டுவதற்கு வழங்கப்பட்டு புதிய பிளேஸ் ப்ளூ தவிர கருப்பு, சிவப்பு என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.

கலர் எல்சிடி கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு டிஜிட்டல் முறையில் மிக சிறப்பான UI பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றிருப்பதுடன், கவனிக்கதக்க அம்சங்களாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ரைட் ஸ்டேட்ஸ், வாய்ஸ் அசிஸ்ட் என பலவற்றை கொண்டுள்ளது.

டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எக்ஸ்பி விலை ரூ.1,00,417 (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது.

Exit mobile version