டிவிஎஸ் என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாடில் தோர் மற்றும் ஸ்பைடர் மேன் வேரியன்ட் அறிமுகம்

2c9cc tvs ntorq 125 supersquad thor edition

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முன்பாக விற்பனை செய்து வருகின்ற என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிதாக சூப்பர் ஸ்குவாட் எடிசனில் கூடுதலாக இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது

முன்பே சூப்பர் ஸ்குவாட் எடிசனில் அயன் மேன் பிளாக் பேந்தர் மற்றும் கேப்டன் அமெரிக்கா போன்ற நிறங்களில் விற்பனை செய்து வருகின்றது அந்த வரிசையில் தற்பொழுது ஸ்பைடர்மேன் மற்றும் தோல் ஆகிய ஹீரோக்களின் இன்ஸ்பிரேஷனல் தற்பொழுது புதிதாக இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது மேலும் இதனுடைய விலை எந்த மாற்றங்களும் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லாமல் கொண்டு வந்துள்ளது.

ஸ்பைடர்மேன் வெர்சனை பொறுத்தவரை நீலம் மற்றும் சிவப்பு நிற கலவை கொடுக்கப்பட்டுள்ளது அடுத்த தோர் வெர்ஷனை பொருத்தவரை ஹேமர் ஆனால் வடிவில் லோகோ கொடுக்கப்பட்டு கூடுதலாக கருப்பு மற்றும் சில்வர் நிற கலவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடல்களுக்கான டிவிஎஸ் கனெக்ட் அவனது தோல் மற்றும் ஸ்பைடர் மேன் இன்ஸ்பிரேஷனாக கொடுக்கப்பட்டுள்ளது மாற்றம் என்றால் வழக்கமான மற்ற அம்சங்களை மட்டுமே ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய CVTi-REVV 124.79 சிசி ஒற்றை சிலிண்டர் 4 ஸ்டோர்க் 3 வால்வுகளை கொண்ட ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9.3 bhp ஆற்றலை 7500 ஆர்.பி.எம் சுழற்சியில் வழங்குவதுடன், அதிகபட்சமாக 7500 ஆர்.பி.எம் சுழற்சியில் 10.5 Nm டார்க்கினை வழங்குகின்றது.

இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் வகையிலான ஆதரவினை கொண்டதாக வந்துள்ள என்டார்க் 125 மாடலில் டிவிஎஸ் SmartXonnect எனப்படும் நுட்பம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ஆகும்.

விற்பனையில் உள்ள டிவிஎஸ் என்டார்க் சூப்பர் ஸ்குவாட் எடிசன் விலை ரூ.84,850

Exit mobile version