Automobile Tamilan

ஸ்கூட்டி பெப்+ முதல் காதல் எடிசனை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

a4633 tvs scooty pep mudhal kadhal edition priceதமிழகத்திற்காக பிரத்தியேகமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி பெப்+ அடிப்படையிலான முதல் காதல் எடிசன் விலை ரூ.56,085 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆட்டோபமொபைல் சந்தையில் முதன்முறையாக தமிழில் லோகோ இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஸ்கூட்டி பெப்+ ஸ்கூட்டரில் பிரத்தியேகமாக வெங்கலம் மற்றும் சில்வர் நிற கலவையுடன், கருப்பு, பிரவுன் நிற கலவையிலான இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

5 hp குதிரைத்திறன் மற்றும்  5.8Nm முறுக்கு விசை வெளிப்படுத்தும் 87.8 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த எடையை பெற்ற ஸ்கூட்டர் மாடலாக 95 கிலோ மட்டும் பெற்றுள்ளது.

சிபிஎஸ் எனப்படுகின்ற கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டத்தை டிவிஎஸ் நிறுவனம்  சிங்க்ரோய்ஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் என அழைப்பதுடன் இரு டயர்களிலும் 110 மிமீ டிரம் பிரேக் கொண்டுள்ளது.

விற்பனையில் உள்ள டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ சாதாரண நிற வேரியண்டை விட ரூ.1,610 கூடுதலாகவும், மேட் எடிசனை விட ரூ.500 கூடுதலாக அமைந்துள்ளது.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் – ரூ.54,475

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிசன் – ரூ.55,585

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் முதல் காதல் – ரூ.56,085

Exit mobile version