Automobile Tamilan

ஹீரோ ஜூம் 160 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் டீசர் வெளியானது

hero xoom 160 adv teased

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நவம்பர் 7 ஆம் தேதி துவங்க உள்ள EICMA 2023 ஷோவில் லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற ஜூம் 160 அட்வென்ச்சர் மேக்ஸி ஸ்டைல் பெற்ற மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

ஹீரோ வெளியிட்டுள்ள டீசரில் முன்பாக மேக்ஸி ஸ்டைல் கொண்ட ஸ்கூட்டரில் ஜூம் 160 என உறுதிப்படுத்தியிருந்தோம். தற்பொழுது வெளியிட்டுள்ள டீசர் மூலம் ஹெட்லைட், என்ஜின் தொர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது.

Hero Xoom 160 Adv Scooter

இன்றைக்கு வெளியான டீசரில் ஜூம் 160 பேட்ஜ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் லிக்யூடு கூல்டு என்ஜின் எனவும் பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, இரட்டை எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப் உடன் பெரிய விண்ட்ஸ்கிரீனுக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் கடினமான தோற்றமுடைய பேனல்கள், 14 அங்குல அலாய் வீல், படிக்கட்டு இருக்கை மற்றும்  பெட்டியை வைப்பதற்கு பின்புறத்தில் உயர்த்தப்பட்ட ரேக்குகள் ஆகியவை உள்ளது.

ஜூம் 160 அட்வென்னச்சர் ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் கொண்டிருப்பதுடன் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும்  பின்புறத்தில் டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் , டிராக்‌ஷன் கண்ட்ரோல்  போன்ற வசதிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.

வரும் 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் ஹீரோ ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

Exit mobile version