Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 அறிமுக விபரம் வெளியானது

new re 450 bike spotted

செர்பா 452 இன்ஜினை பெற உள்ள இரண்டாவது மாடலாக கொரில்லா 450 மோட்டார் சைக்கிளை அடுத்த சில வாரங்களுக்கு பிறகு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட உள்ளது. 450cc என்ஜின் பெற்ற மாடலாக ஹிமாலயன் 450 விற்பனைக்கு கிடைக்கின்றது.

டிரையம்ப் ஸ்பீடு 400, ஹோண்டா CB300R உட்பட ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் விலைக்குள் கிடைக்கின்ற பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளும் நியோ ரெட்ரோ ரோட்ஸ்டெர் ஸ்டைல் பெறுகின்ற கொரில்லா 450ல் இடம்பெற உள்ள என்ஜின் விபரம் பின்வருமாறு;-

செர்பா 452 என அழைக்கப்படுகின்ற 452cc ஒற்றை சிலிண்டருடன் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் பெற்றிருக்கும்.

ஹண்டர் 350 பைக்கின் தோற்ற உந்துதலை தழுவியதாகவும், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் பெற்றதாகவும், பிரேக்கிங் அமைப்பில் முன்பக்கத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக பொதுவாக இருபக்க டயரிலும் 17 அங்குல அலாய் வீல் பெறலாம்.

ஸ்மார்ட்போன் இணைப்பு அம்சங்களுடன் பெற்ற புதிய 4 இன்ச் வண்ண TFT கிளஸ்ட்டரில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டிரிப்பர் நேவிகேஷன் வசதி உள்ளிட்டவற்றை பெறக்கூடும்.  வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக்கின் விலை ரூ.2.30 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது.

Exit mobile version