Automobile Tamilan

புதிய எஞ்சினுடன் 2024 ஜாவா 42 விற்பனைக்கு அறிமுகமானது

 

2024 jawa 42 bike new

புதிய 296cc J-panther எஞ்சின் பெற்று வந்துள்ள ஜாவா 42 பைக்கில் குறிப்பிட்டதக்க சில மேம்பாடுகளை பெற்று ரூ.1.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய எஞ்சினை விட மேம்பட்ட NVH பெற்று சிறப்பான வகையில் எஞ்சின் வெப்பத்தை கையாளுவதற்கு ஏற்ற கூலிங் திறன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக சிறப்பான டார்க் மற்றும் பெர்ஃபாமென்ஸ் வழங்க எஞ்சின் ட்யூன் செய்யப்பட்டு சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் உள்ளது.

ஜாவா 42 பைக் மாடலில் புதிய J-PANTHER 296சிசி, லிக்யூடு கூல்டு என்ஜின் மூலம் அதிகபட்சமாக 27 bhp மற்றும் 26.8 Nm டார்க்கை வழங்குகிறது. இந்த மாடலில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அடிப்படையான பைக் டிசைனில் எந்த மாற்றமும் மற்றபடி மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை.

டபுள் கார்டிள் ஃபிரேம் கொண்டு வலிமைக்கப்பட்டுள்ள இந்த மாடலில் முன்புறத்திலும் பின்புறத்திலும் டிஸ்க் பிரேக் ஆனது கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது சஸ்பென்ஷன் அமைப்பினை பொருத்தவரை முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் முறையானது கொடுக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக விற்பனை செய்யப்பட்ட மாடலை விட ரூபாய் 17000 விலை குறைவாக வந்திருக்கின்றது.

Exit mobile version