Categories: Bike News

2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T பைக் டீசர் வெளியானது

36616 hero xpulse 200t teased 12023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T பைக் விரைவில் விற்பனை விற்பனைக்கு வெளியாக உள்ளதை உறுதி செய்யும் வகையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டீசரை வெளியிட்டுள்ளது. அட்வென்சர் எக்ஸ்பல்ஸ் 200 மாடல் அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த புதிய மாடல் ஆனது பல்வேறு டிசைன் மாற்றங்களை பெற்று இருக்கும் கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற இந்த மாடலானது மிக நேர்த்தியான டிசைன் மாற்றங்களை பெற்று கூடுதலாக நான்கு வால்வு என்ஜினை பெறும் என்பது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.                                                                                                   தற்பொழுது கிடைத்துள்ள டீசரை பொருத்தவரை பல்வேறு டிசைன் மாற்றங்கள் பெற்று இருப்பது உறுதியாகியுள்ளது மேலும் புதிய மாடலில் போர்க் கேய்டர்ஸ் தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ளது கிராப் ரெயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஏர் மற்றும் ஆயில் கூல்டு 4 வால்வுகளை பெற்ற ஒற்றை சிலிண்டர் எஞ்சின் ஆனது பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் இடம் பெற்று இருக்கின்றது இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.1 எச்பி பவரையும் டார்க்கானது 17.35 நியூட்டன் மீட்டரை வெளிப்படுத்தும்.                                                                                                              டீசர் வெளியிடப்பட்டுள்ளதால் விரைவில் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற 2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T மாடல் விலை அனேகமாக ரூபாய் 1.25 லட்சம் முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.