Automobile Tamilan

ஜனவரி 9ல் புதிய வருடத்துக்கான நிறங்களை வெளியிடும் யமஹா

yamaha launch 9th jan

யமஹா மோட்டார் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் அறிமுகத்தை ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதை டீசர் மூலம் உறுதி செய்துள்ளது. அனேகமாக தன்னுடைய பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் புதிய நிறத்தை கொண்டு வருவதுடன் 2024ல் வெளியிட உள்ள மாடல்கள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளிவரலாம்.

சமீபத்தில் இந்நிறுவனம் முழுமையாக வடிவமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்ற யமஹா R3, யமஹா MT03 பைக்குகளை ரூ.4.59 லட்சம் முதல் ரூ.4.64 லட்சம் வரை வெளியிட்டுள்ளது.

2024 Yamaha Fascino & Ray ZR

125சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ரே இசட்ஆர் மற்றும் ஃபேசினோ ஸ்கூட்டர்களில் மேம்பட்ட புதிய நிறங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. மற்றபடி கூடுதலாக சில வசதிகள் சேர்க்கப்படலாம்.

பவர் மற்றும் டார்க் எந்த மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து 125cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக  8.2PS பவரை 6500rpm-ல், 10.3 Nm டார்க் 5000 rpmல் வெளிப்படுத்தும். இந்த மாடலில் சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

இதுதவிர இந்நிறுவனம் மேக்ஸி ஸ்டைல் பெற்ற ஏரோக்ஸ் 155cc மாடலில் கூடுதல் நிறங்களை கொண்டு வரக்கூடும்.

2024 ஆம் ஆண்டிற்கான மேம்பட்ட வசதிகள் பெற்ற யமஹா FZ-S பைக்குகளும் புதிய நிறங்களுடன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் ஜனவரி 9 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு யூடியூப் மூலம் தகவலை வெளியாக உள்ளது.

Exit mobile version