இந்தியா வரவுள்ள வெஸ்பா எலெக்ட்ரிகா ஸ்கூட்டர் சிறப்புகள்

vespa electtrica

பியாஜியோ குழுமத்தின் வெஸ்பா எலெக்ட்ரிகா (Electtrica) இ ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தைக்கான பிரத்தியேக மின்சார ஸ்கூட்டரை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை பியாஜியோ துவக்கியுள்ளது.

சர்வதேச அளவில் சில நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற Electtrica ஸ்கூட்டர் மாடலில் 4.3kWh லித்தியம் ஐயன் பேட்டரி பேக்கினை பொருத்தி புரூஸ்லெஸ் டிசி மோட்டார் மூலமாக  அதிகபட்சமாக 4kW பவர் மற்றும் தொடர்ச்சியான முறையில் 3.6kW பவரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின் ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் பவர் என இரண்டு சவாரி முறைகளுடன் வருகிறது.

ஈக்கோ சவாரி முறையில் 100 கிமீ தொலைவு பயணிக்கவும், பவர் மோடில் 70 கிமீ பயணிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. பவர் மோடில் அதிகபட்சமாக மணிக்கு 70 கிமீ வேகத்திலும், ஈக்கோ மோடில் 45 கிமீ வேகத்திலும் பயணிக்கும் திறனை கொண்டுள்ளது.

ரெட்ரோ டிசைனை பெற்ற வெஸ்பா எலெக்ட்ரிகா ஸ்கூட்டரை பொறுத்தவரை வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் விளக்கு, மிகவும் ஸ்டைலிஷான க்ரோம் மற்றும் சில்வர் ஃபினிஷ் பாகங்களை கொண்டுள்ளது. இந்த மாடலில் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி ஆதரவை பெற்றிருப்பதுடன் வெஸ்பா ஆப் வழங்கப்படுகின்றது.

வெஸ்பா எலக்ட்ரிகா மாடலில் 12 அங்குல வில் மற்றும் 10 அங்குல வீல் வழங்கப்படுவதுடன் முன் பக்கமாக சிங்கிள் சைட் ட்ரைலிங் லிங்க் சஸ்பென்ஷனுடன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. முன்புறத்தில் பிரேக்கிங் 200 மிமீ டிஸ்க் மற்றும் 140 மிமீ டிரம் பெற்றுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள வெஸ்பா எலெக்ட்ரிகா மாடல் குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. ஆனால் அடுத்த ஆண்டில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பியாஜியோ விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

Exit mobile version