யமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்

வரும் ஜனவரி 21ந் தேதி வெளியிடப்பட உள்ள புதிய யமஹா FZ-S வெர்ஷன் 3.0 படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய FZ-S  பைக்கில் ஏபிஎஸ் மற்றும் நேர்த்தியான டேங்க் டிசைனை பெற்றுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட யமஹா FZ-S விற்பனையில் உள்ள FZ25 மாடலின் தோற்ற உந்துதலை பெற்றதாக விளங்கும் புதிய பைக்கில் எல்இடி முகப்பு விளக்கை கொண்டுள்ளது. அனேகமாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கை இந்த மாடல் பெற்றிருக்கும்.

யமஹா FZ-S ஏபிஎஸ்

புதிய மாடலில் பெரிதாக என்ஜின் பவர் மற்றும் டார்கில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே யமஹா எஃப்இசட்-எஸ் வெர்ஷன் 3.0 பைக்கில் 13 பிஎச்பி ஆற்றல், 12.8 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 149cc ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

புதிய மாடல் இரு பிரிவை பெற்ற எல்இடி ஹெட்லேம்ப், நேர்த்தியான புதுப்பிக்கப்பட்ட டேங்க் டிசைன், புதிய மட்கார்டு, இரட்டை பிரிவு இருக்கைக்கு மாற்றாக ஒற்றை இருக்கை வசதி, முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குடன் இணைக்கப்பட்ட சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றிருக்கலாம்.

பின்புறத்தில் புகைப்போக்கி ஸ்டைல், கிராப் ரெயில்  மற்றும் டெயில் லைட் ஆகியவற்றை யமஹா புதுப்பித்துள்ளது.

மற்றபடி இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் 282 டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் உடன் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றிக்கும்.

தமிழகத்தில் ரூ.87,000 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா எஃப்இசட் எஸ் , ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளதால் ரூ. 8000 முதல் ரூ.12,000 வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.