2019 யமஹா FZ V3.0 பைக்கின் விலை மற்றும் முக்கிய விபரங்கள்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2019 யமஹா FZ V3.0 மற்றும் யமஹா FZS V3.0 பைக்குகளின் முக்கிய விபரங்கள் மற்றும் விலை குறித்து அறிந்து கொள்ளலாம். இரு பைக்குகளிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

2019 யமஹா FZ V3.0 பைக்

150சிசி மற்றும் 160சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற இருசக்கர வாகனங்களுக்கு மிகவும் சவாலாக போட்டியாளர்களை விட சிறந்த ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள யமஹாவின் எஃப்இசட் வரிசை மாடல்களின் என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

புதுப்பிக்கப்பட்ட யமஹா FZ டிசைன்

கடந்த நான்கு வருடங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் 3.0 யமஹா FZ பைக்கில் பெட்ரோல் டேங்க் மிக நேர்த்தியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் , எல்சிடி கிளஸ்ட்டர், முந்தைய இரு பிரிவு இருக்கைக்கு மாற்றாக ஒற்றை இருக்கை வசதி, எஃப்இசட்25 பைக்கில் இடம்பெற்றுள்ளதை போன்ற சைலென்சர் கொண்டுள்ளது.

FZS மாடலில் கூடுதலான க்ரோம் பாகங்களை பெற்று பிரிமியம் தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது. FZS பைக்கில் மேட் பிளாக், மேட் ப்ளூ மற்றும் சியான் ப்ளூ நிறங்கள் உள்ளன. யமஹா FZ வெர்ஷன் 3.0 பைக்கில் மெட்ரிக் ப்ளூ மற்றும் ரேசிங் ப்ளூ ஆகிய நிறங்கள் உள்ளன.

என்ஜின்

புதிய எஃப்இசட் மற்றும் எஃப்இசட்-எஸ்  பைக்கின் என்ஜின் பவர் மற்றும் டார்க் மாற்றங்கள் இல்லாமல் வந்துள்ளது. எனவே, யமஹா எஃப்இசட்-எஸ் மற்றும் எஃப்இசட் வெர்ஷன் 3.0 பைக்கில் 13.2 bhp ஆற்றல், 12.8 Nm டார்க் வெளிப்படுத்துகிற 149cc ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

வசதிகள்

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் 282 டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் உடன் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றிக்கும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரதரமாக இணைக்கப்பட்டுள்ளது.

எல்இடி ஹெட்லைட், எல்சிடி கிளஸ்ட்டரில் டார்க் மற்றும் லைட் மோட் என இரண்டையும் பெற்றுள்ளது.

போட்டியாளர்கள்

பஜாஜ் பல்சர் 160, ஹோண்டா ஹார்னெட் 160, சுசூகி ஜிக்ஸர், மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ஆகிய மாடல்களை எஃப்இசட் பைக் எதிர்கொள்ள உள்ளது.

யமஹா FZ V3.0 விலை விபரம்

யமஹா FZ FI ABS பிரேக் விலை ரூபாய் 95,000

யமஹா FZS FI ABS பிரேக் விலை ரூபாய் 97,000

(எக்ஸ்-ஷோரூம் விலை தமிழ்நாடு)

 

தொடர்ந்து புதிய பைக் செய்திகள் மற்றும் கார் செய்திகள் பெற  பெற ஆட்டோமொபைல் தமிழனை பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Exit mobile version