ப்ளூடுத் வாயிலாக ஸ்மார்ட்போனை இணைத்து பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சத்தை வழங்குகின்ற மோட்டார் சைக்கிள் கனெக்ட் X வசதி யமஹா FZS-FI டார்க்நைட் மாடலில் ரூ.1,07,700 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய “யமஹா மோட்டார் சைக்கிள் கனெக்ட் எக்ஸ்” ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் வழங்கப்படுடள்ள ஆப் மூலமாக, தனித்துவமான வழிகளில் வாடிக்கையாளர்களுக்கு ரைடிங் மற்றும் சர்வீஸ் உள்ளிட்ட அம்சங்களை வழங்கும்.
முதற்கட்டமாக FZS-FI டார்க்நைட் வேரியண்டில் கிடைக்க துவங்கியுள்ள நிலையில், விரைவில் FZ- FI மற்றும் FZS-FI (150 சிசி) மோட்டார் சைக்கிள்கள் அங்கீகரிக்கப்பட்ட யமஹா டீலர்ஷிப்களில் கூடுதல் துணை சாதனத்தை பொருத்தி இந்த நுட்பத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம் என யமஹா உறுதிப்படுத்தியுள்ளது.
யமஹா மோட்டார் சைக்கிள் கனெக்ட் எக்ஸ் பயன்பாட்டில் 6 முக்கிய அம்சங்கள் வழங்கபட்டுள்ளன. அவற்றை மொபைலின் ‘ஒரே தொடுதல்’ மூலம் பைக்கை இணைக்க வகையில் உருவாக்கப்படுடள்ளது. மொபைல் சாதனத்திலிருந்து வாகன இருப்பிடத்தை அறிய, மற்றும் பைக்கினை இ-லாக் செய்ய இயலும்.
1. ஏன்ஸர் பேக் வசதி செயல்படுத்தும் போது ஹார்ன் மற்றும் இன்டிகேட்டர் செய்லபடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
2. இ-லாக் அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் பைக்கை மொபைல் மூலமாக பூட்டுவதனால் பைக் திருடு போவதனை தடுக்கலாம்.
3. எனது பைக்கைக் கண்டுபிடி அம்சத்ததினை செயல்படுத்தினால் பைக்கின் இன்டிகேட்டர் 10 விநாடிகள் தொடர்ந்து ஒளிரும்.
4. ஹஸார்டு வசதி மூலமாக சிக்கலான நேரங்களில் பைக்கின் 4 இண்டிகேட்டர்களையும் தொடர்ந்து ஒளிர செய்யலாம்.
5. ரைடிங் வரலாறு நமது பைக்கில் எங்கெங்கு சவாரி செய்துள்ளோம் என்ற தனிப்பட்ட பயண விவரங்களை காணலாம்.
6. பார்க்கிங் பதிவு அம்சத்தின் மூலமாக தற்போதைய பார்க்கிங் உட்பட முன்பாக பார்க்கிங் செய்த இடங்களை வரைபடத்தில் காட்டுகிறது.
இந்த 6 அம்சங்களை தவிர யமஹா மோட்டார்சைக்கிள் கனெக்ட் எக்ஸ் மூலமாக, ஒவ்வொரு டிரிப் முடிந்த பின்னர் சராசரி வேகம், பிரேக் எண்ணிக்கை மற்றும் பேட்டரி இருப்பு போன்ற பயன்பாட்டில் தனிப்பட்ட பயண விவரங்களை பெறலாம். மேலும் இந்த செயிலி பயன்பாடு பைக்கின் கடைசியாக நிறுத்தப்பட்ட இருப்பிடத்தையும் சேமித்து வைக்கிறது மற்றும் அவர்களின் தற்போதைய இடத்திலிருந்து பைக்கிற்கு ஜி.பி.எஸ் மூலமாக பயன்படுத்தி செல்ல உதவுகிறது.
ப்ளூடுத் மூலம் பைக்கினை Yamaha Motorcycle Connect X ஆப் இனைப்பது எப்படி ?
யமஹா நிறுவனத்தின் இந்த வசதியை பெறுவதற்கு ஆண்டராய்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்ற Yamaha Motorcycle Connect X செயலியை தரவிறக்க வேண்டும்.
தரவிறக்கிய பிறகு உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து உள் நுழையலாம்.
பின்னர், பைக்கின் சேஸ் எண்ணை பதிவு செய்து, யமஹா பைக்கில் உள்ள கிளஸ்ட்டரை ப்ளூடூத் வசதியினை இணைக்க QR கோடினை ஸ்கேன் செய்தால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி எண் கிடைக்கும். அதனை உறுதிப்படுத்திய பின்னர் மேலே குறிப்பிட்ட வசதிகளை பயன்படுத்தலாம்.
வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் யமஹா FZS-Fi டார்க்நைட் வேரியண்டில் ப்ளூடூத் கனெக்ட்டிவிடி வசதி பெற்ற மாடல் கிடைக்க உள்ளது. இது சாதாரன மாடலை விட ரூ.2,500 கூடுதலாக அமைந்துள்ளது.
149 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட், 2-வால்வு, மூலம் பவர் 9.1 கிலோவாட் அல்லது 12.4 பிஎஸ் பவர் மற்றும் 13.6 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
web title : Yamaha FZS-Fi get Bluetooth Connectivity “Motorcycle Connect X” App
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…