Automobile Tamilan

யமஹா ரேஇசட்ஆர் மற்றும் ஸ்ட்ரீட் ரேலி ஹைபிரிட் விற்பனைக்கு வந்தது

a17fb yamaha ray zr 125 hybrid

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் ஹைபிரிட் வசதி பெற்ற ரேஇசட்ஆர் மற்றும் ஸ்ட்ரீட் ரேலி என இரு மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. முன்பாக ஃபேசினோ ஸ்கூட்டரில் ஹைபிரிட் ஆப்ஷனை கொண்டு வந்திருந்தது.

யமஹா 125சிசி ஹைபிரிட் இன்ஜின்

பிஎஸ்-6 இன்ஜினில் கூடுதலாக ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டரை (Smart Motor Generator -SMG) இணைத்துள்ளது. இதன் மூலம் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்கின்ற வசதி மற்றும் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை செயல்படுத்துகின்றது. குறிப்பாக, மின்சார மோடடார் உதவியுடன் நிற்கும் போது அல்லது செங்குத்தான சாலை பயணத்தில் சிறிய சக்தியை வழங்குகிறது. பவர் அசிஸ்ட் செயல்பாடு செயல்பாட்டில் இருக்கும்போது கிளஸ்டரில் அறிவிப்பு கிடைக்கின்றது. மூன்று விநாடிகளுக்கு பிறகு அல்லது முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட ஆர்.பி.எம் தாண்டிய பிறகு அல்லது திராட்டலை மூடினால் அசிஸ்ட் வசதி முடக்கப்படும்.

இந்த மாடலில் 8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 10.3 என்எம் டார்க் (முன்பு 9.7 என்எம்) வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் டெக் கொண்ட ரேஇசட்ஆர் டிரம் பிரேக் மாடல் ரூ.76,830 விலையும், டிஸ்க் பிரேக் பதிப்பு ரூ.79,830 ஆகும். ஸ்ட்ரீட் ரேலி வேரியன்ட்டின் விலை ரூ.83,830 (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

Exit mobile version