Automobile Tamilan

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

2024 yamaha r15m carbon fiber pattern

இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி பேனல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வண்ண TFT டிஸ்ப்ளே பெற்றிருப்பதுடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் மியூசிக் சார்ந்த பயன்பாடுகளுக்கு வால்யூம் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. புளூடூத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போனை இணைத்த பிறகு, யமஹா Y-connect ஆப் பயன்படுத்தி பல்வேறு அம்சங்களை அணுகலாம்.

ஆர்15எம் பைக்கின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை. LC4V 155cc, லிக்யூடு கூல்டு SOHC நான்கு வால்வு, சிங்கிள் சிலிண்டர் VVA பெற்ற என்ஜின் 18.1 bhp மற்றும் 14.2 Nm வெளிப்படுத்துகின்றது. சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் உடன் வருகின்றது.

முன்பக்கத்தில் அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் உடன் 282 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ரேடியல் டயருடன் 220 மிமீ டிஸ்க் உடன் யமஹா ஆர்15எம் பைக்கில் டூயல் சேனல் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

(Ex-showroom TamilNadu)

Exit mobile version