Automobile Tamilan

புதிய யமஹா R15M மோட்டோஜிபி எடிசன் வெளியானது

yamaha r15m and mt 15 motogp

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நிறங்களை பெற்றிருந்த 2024 யமஹா R15M பைக்கில் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி பாடி கிராபிக்ஸ் டிசைன் பெற்ற மாடல் கூடுதலாக வெளியிடப்பட்டிருக்கின்றது.

கூடுதலாக MT 15 பைக்கில் எந்த மாற்றங்களும் இல்லாமல் விலை மற்றும் ரூபாய் 700 உயர்த்தப்பட்டுள்ளது.

மான்ஸ்டர் எனர்ஜி லோகோ பெற்று கூடுதலாக பாடி கிராபிக்ஸ் ஆனது மோட்டோ ஜிபி பந்தயங்களில் உள்ள பைக்குகளில் பயன்படுத்துவதற்கு இணையாக வழங்கப்பட்டிருக்கின்றது. மற்றபடி வழக்கமாக உள்ள மாடலில் உள்ளதைப் போன்றே மெக்கானிக்கல் மற்றும் எஞ்சின் சார்ந்த அம்சங்கள் உள்ளன.

R15M மற்றும் MT 15 என இரண்டிலும் சக்திவாய்ந்த செயல்திறனை வெளிப்படுத்துகின்ற 155cc எஞ்சின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 14.2Nm at 7,500rpm மற்றும் அதிகபட்ச சக்தி 13.5 kW at 10,000 rpm-ல்  வெளிப்படுத்துகின்றது.

சமீபத்தில் ஆர்15எம் மாடலில் கார்பன் ஃபைபர் பேட்டர்ன் கொண்டுள்ள வகையிலான பேனல்கள் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வெளியானது. கூடுதலாக R15M மாடலில் ப்ளூடூத் இணைப்புடன் கூடிய வண்ண TFT கிளஸ்ட்டருடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் கொண்டுள்ளது.

(Ex-showroom Tamilnadu)

 

Exit mobile version