Automobile Tamilan

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

yamaha rayzr 125 fi hybrid offers

யமஹா நிறுவனத்தின் RayZR 125 Fi ஹைபிரிட் மற்றும் RayZR 125 Fi ஹைபிரிட் ஸ்டீரிட் ரேலி என இரு மாடல்களுக்கும் ரூ.7,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் தள்ளுபடி, கூடுதலாக 10 வருட வாரண்டி என ஒட்டுமொத்தமாக ஆன்ரோடு விலையில் 10,010 வரை சிறப்பு சலுகையை 70வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

யமஹா மோட்டார் துவங்கப்பட்டு 70 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் இதனை கொண்டாடும் வகையில் இந்த சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

வழக்கமாக 2 வருட வாரண்டி வழங்கப்படுகின்ற நிலையில் கூடுதலாக 8 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டிக்கு எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் இந்த சிறப்பு சலுகையை இந்நிறுவனம் ஜூலை 1, 2025 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை அறிவித்துள்ளது.

ரேஇசட்ஆர் 125 மாடலில் 8.2hp பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ ஹைபிரிட் என்ஜின் அதிகபட்சமாக 10.3Nm டார்க் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் என இரு ஆப்ஷனை கொண்டு எல்இடி ஹெட்லேம்ப் பெற்று டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் யமஹா Y கனெக்ட் வசதி போன்றவை உள்ளது. தமிழ்நாட்டில் யமஹா ரேஇசட்ஆர் 125 ஆரம்ப விலை ரூ.80,620 முதல் ரூ.88,810 மற்றும் ஸ்டீரிட் ரேலி ரூ. 92,900 எக்ஸ்-ஷோரூம் விலை உள்ளது.

Exit mobile version