இந்தியாவில் யமஹாவின் 155சிசி வரிசையில ஆர்15 மற்றும் எம்டி-15 என இரண்டும் பிரபலமாக உள்ள நிலையில், அடுத்த மாடல் அனேகமாக XSR 155 ஆக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் WR155 R அட்வென்ச்சர் மாடலும் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
XSRக்கு இணையான டிசைனை தழுவிய FZ-X விற்பனையில் உள்ள நிலையில் வரவுள்ள மாடல் அனேகமாக அட்வென்ச்சர் ஸ்டைலை பெற்று குறிப்பாக எக்ஸ்பல்ஸ் 210, கவாஸாகி KLX போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையிலான WR155 R இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
Yamaha WR 155 R
நம்பகமான ஆர்15 மற்றும் எம்டி-15 என இரண்டிலும் உள்ள அதே 155சிசி என்ஜினை பெற்றுள்ள டபிள்யூஆர் 155 ஆரிலும் 155cc சிங்கிள் சிலிண்டர் VVA பெற்ற என்ஜின் 16.6 hp மற்றும் 7,500ஆர்பிஎம்மில் 14.1 Nm டார்க்கை வெளியிடுகிறது, மேலும், 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
செமி டபூள் காளர்டிள் சேஸிஸை பெற்றுள்ளதால் மிக சிறப்பான ஆஃப் ரோடு சாலைகளுக்கும் ஏற்றதாகவும், முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃ போர்க்கினை கொண்டு மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் பெற்று அனைத்து சாலைகளிலும் பயணிக்க ஏற்ற டூயல் ஸ்போர்ட் டயர் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் முன்பக்கத்தில் 21 அங்குல ஸ்போக்டூ வீல், பின்புறத்தில் 18 அங்குல வீலுடன் இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு 134 கிலோ எடையுள்ள இந்த WR 155Rல் இருக்கை உயரம் 840 மிமீ ஆக சர்வதேச சந்தைகளில் உள்ளது.
எக்ஸ்எஸ்ஆர் 155 மற்றும் டபிள்யூஆர் 155ஆர் என இரண்டுமே இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படுவதனால் இரண்டு மாடல்களையும் யமஹா கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.
முழுமையான விவரங்ளை அறிந்து கொள்ள நாம் நவம்பர் 11, 2025 வரை காத்திருக்க வேண்டியுள்ளது.