Automobile Tamilan

யெஸ்டி அட்வென்ச்சரில் மவுன்டெயின் பேக் ஆக்சசெரீஸ்

yezdi adventure bike

விற்பனையில் உள்ள யெஸ்டி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் முன்பாக ரூ.17,500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த மவுன்டெயின் பேக் (Mountain Pack accessories) தற்பொழுது அடிப்படை அம்சமாக சேர்க்கப்பட்டாலும் விலையில் எந்த மாற்றமும் இல்லை தொடர்ந்து ரூ.2.16 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) முதல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜெர்ரி கேன், மெயின் கேஜ், நக்கிள் கார்ட்ஸ், பார் எண்ட் வெயிட்ஸ், ஹெட்லேம்ப் கிரில் மற்றும் க்ராஷ் கார்டு ஆகியவை Mountain Packல் உள்ளது. மற்றபடி, வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

இந்த அட்வென்ச்சரில் தொடர்ந்து 334சிசி, சிங்கிள்-சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்டு எஞ்சின் பெற்று  8000 RPM-ல் 30.2 PS மற்றும் 6500 RPM-ல் 29.9 Nm டார்க் வழங்குவதுடன் இந்த மாடலில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் கொண்டுள்ள யெஸ்டி அட்வென்ச்சரில் முன்புறம் 41 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 7-ஸ்டெப் ப்ரீ-லோட் அட்ஜஸ்ட்மென்டுடன் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெறுகின்றது. இரு டயரிலும் டிஸ்க் பிரேக்கு உடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

Exit mobile version