Automobile Tamilan

ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்

vida vx2 electric scooter

ஹீரோ மோட்டோகார்ப் கீழ் செயல்படுகின்ற விடா எலக்ட்ரிக் பிராண்டின் பட்ஜெட் விலை, குடும்பங்களுக்கு ஏற்ற VX2 மின்சார ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை, வகைகள், ரேஞ்ச், நிறங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

Hero Vida VX2

விடா பிராண்டில் ஏற்கனவே V2 என்ற மாடல் விற்பனையில் உள்ள நிலையில் புதிதாக வந்துள்ள VX2 மாடலுக்கு பேட்டரி, மோட்டார் உட்பட பல்வேறு முக்கிய விபரங்களை பகிர்ந்து கொண்டாலும் தனித்துவமான டிசைனை விடா ஜீ கான்செப்ட்டில் இருந்து பெற்றதாக அமைந்துள்ளது.

(Ex-showroom TamilNadu)

BAAS முறையில் வாங்கினால் ஒரு கிமீ பயணத்துக்கு 0.96 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும். நீங்கள் அதை BaaS திட்டத்தின் மூலம் வாங்கியிருந்தால், பேட்டரியின் செயல்திறன் 70 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், இலவசமாக மாற்றித் தரப்படும்.

Hero Vida VX2 electric Scooter on-Road Price in Tamil Nadu

2025 ஹீரோ விடா விஎக்ஸ்2 கோ, விஎக்ஸ்2 பிளஸ் மற்றும் விஎக்ஸ்2 புரோ என மூன்று ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

(All Price on-road Tamil Nadu)

(All Price on-road Pondicherry)

டிஸ்க் பிரேக் முன்புறத்திலும், டிரம் பிரேக் பின்புறத்தில் 90/90-12 மற்றும் 90/100-12 ட்யூப்லெஸ் டயருடன் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்தை பெறுகின்றது. இந்த மாடல் 26 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது.

4.3 அங்குல TFT டிஜிட்டல் கிளஸ்ட்டரை பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் கூடுதலாக OTA மேம்பாடு, க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் மிக முக்கியமானதாகும். சார்ஜர், பேட்டரி, மற்றும் மோட்டார்  வாகனத்திற்கு என 3 ஆண்டுகள் அல்லது  30,000 கிமீ எது முதலில் வருகின்றதோ அதுவரை வாரண்டி வழங்கப்படுகின்றது. அடுத்து வாகனத்திற்கு 5 வருடம் அல்லது 50,000 கிமீ வரை கிடைக்கும்.

VX2 BAAS திட்ட விளக்கம்

மூன்று ஆண்டுகளுக்கு VX2 Go வேரியண்டுக்கு தினமும் 40 கிமீ பயணிக்கும் வகையில் மாதம் 1200 கிமீ பயணிக்கின்ற வகையிலான முதல் திட்டத்துக்கு கட்டணம் 1,488 ரூபாய் வசூலிக்கப்படும், இதன் மூலம் கிமீ ஒன்றுக்கு கட்டணம் ரூ.1.24 பைசா ஆகும்.

VX2 GO இரண்டாவது BAAS ஐந்து ஆண்டு திட்டத்தில் தினமும் 25 கிமீ பயணிக்கும் வகையில் மாதம் 750 கிமீ பயணிக்கின்ற வகையிலான BAAS கட்டணம் 1,108 ரூபாய் வசூலிக்கப்படும், இதன் மூலம் கிமீ ஒன்றுக்கு கட்டணம் ரூ.1.47 பைசா ஆகும்.

VX2 Plus BAAS  ஆண்டு திட்டத்தில் தினமும் 80 கிமீ பயணிக்கும் வகையில் மாதம் 2400 கிமீ பயணிக்கின்ற வகையிலான BAAS கட்டணம் 2160 ரூபாய் வசூலிக்கப்படும், இதன் மூலம் கிமீ ஒன்றுக்கு கட்டணம் ரூ.0.80 பைசா ஆகும்.

VX2 Plus இரண்டாவது BAAS மூன்று ஆண்டு திட்டத்தில் தினமும் 53 கிமீ பயணிக்கும் வகையில் மாதம் 1600 கிமீ பயணிக்கின்ற வகையிலான BAAS கட்டணம் 1,584 ரூபாய் வசூலிக்கப்படும், இதன் மூலம் கிமீ ஒன்றுக்கு கட்டணம் ரூ.0.99 பைசா ஆகும்.

VX2 Plus  BAAS ஐந்து ஆண்டு திட்டத்தில் தினமும் 26 கிமீ பயணிக்கும் வகையில் மாதம் 800 கிமீ பயணிக்கின்ற வகையிலான BAAS கட்டணம் 1,128 ரூபாய் வசூலிக்கப்படும், இதன் மூலம் கிமீ ஒன்றுக்கு கட்டணம் ரூ.1.41 பைசா ஆகும்.

BAAS திட்டம் கட்டணத்தை செலுத்தி முடித்தப் பிறகு ஸ்கூட்டர் மட்டுமல்லாமல் பேட்டரியும் உங்களுக்கு சொந்தமாகிவிடும், அதன் பிறகு கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஹீரோ விடா விஎக்ஸ்2 இ-ஸ்கூட்டரின் நுட்பவிபரங்கள்

                                            VX2 Plus/VX2 Go
வகை எலெக்ட்ரிக்
மோட்டார் வகை PMSM மோட்டார்
பேட்டரி  3.44Kwh/ 2.2kwh
அதிகபட்ச வேகம் 80kmph/70kmph
அதிகபட்ச பவர் 6 KW/3.9kw Nominal
அதிகபட்ச டார்க் 25 Nm
அதிகபட்ச ரேஞ்சு 143km/94km (IDC Claimed)
சார்ஜிங் நேரம் (0-100%) 5.53hrs/3.30hrs
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் அண்டர் போன்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட் Eco, Ride,Sport, Custom
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் மோனோ ஷாக்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 190 mm /டிரம்
பின்புறம் டிரம் 110 mm (with CBS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர்  90/90-12  ட்யூப்லெஸ்
பின்புற டயர்  90/100-12 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட் எல்இடி
சார்ஜர் வகை போர்டபிள் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்
கிளஸ்ட்டர் 7 இஞ்ச் TFT
பரிமாணங்கள்
நீளம்
அகலம்
உயரம்
வீல்பேஸ் 1301 mm
இருக்கை உயரம் 777 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 155 mm
பூட் கொள்ளளவு 26 Litre
எடை (Kerb) 114 kg-125 Kg

2025 Hero Vida VX2 Rivals

ஏதெர் 450S, 450X, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக், ஓலா எஸ்1, ஏதெர் ரிஸ்டா,  ஹோண்டா QC1, ஆக்டிவா e, ஆகியவற்றுடன் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்றது.

Faq விடா விஎக்ஸ்2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஹீரோ விடா VX2 எலட்ரிக் மைலேஜ் எவ்வளவு ?

விடா விஎக்ஸ்2 ஸ்கூட்டர்களின் உண்மையான ரேஞ்ச்.,
விஎக்ஸ்2 கோ ஸ்கூட்டர் 64 கிமீ
விஎக்ஸ்2 பிளஸ் ஸ்கூட்டர் 100 கிமீ

விடா VX2 பவர் மற்றும் டார்க் விபரம் ?

PMSM மோட்டார் பொருத்தப்பட்டு பவர் 6Kw மற்றும் 25 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

ஹீரோ விடா வி2 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

விடா விஎக்ஸ்2 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1.09 லட்சம் முதல் ரூ.1.18 லட்சம் வரை அமைந்தள்ளது.

விடா விஎக்ஸ்2 போட்டியாளர்கள் யார் ?

டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக், ஓலா எஸ்1, ஏதெர் ரிஸ்டா, 450S, 450X, சுசூகி இ அக்செஸ், ஹோண்டா QC1, ஆக்டிவா e, ஆகியவற்றுடன் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும்.

Vida VX2 image Gallery

Exit mobile version