Automobile Tamilan

கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

KTM 160 Duke onroad price

கேடிஎம் வெளியிட்டுள்ள ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய 160 டியூக் பைக்கின் எஞ்சின், வசதிகள், விலைப்பட்டியல் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

கேடிஎம் 160 டியூக் எஞ்சின்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 164.2cc லி்க்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு பவர் 19PS ஆனது 9500 rpm-ல் மற்றும் டார்க் 15.5 Nm ஆனது 7500 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

இந்த பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 38-40 கிமீ வரை கிடைக்கலாம்.

போட்டியாளர்களை விட மிக சிக சிறப்பான பவர் டூ எடை விகிதச்சாரத்தை பெற்றுள்ள 160 டியூக்கின் எடை 147 கிலோ கொண்டுள்ளது.

KTM 160 Duke On-road Price

டியூக் வரிசையில் குறைந்த விலை மாடலாக அமைந்துள்ள 160 டியூக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,71,126 ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் கேடிஎம் 160 டியூக் பைக் ஆன்-ரோடு விலை ரூ.2,05,765 ஆக அமைந்துள்ளது. . புதுச்சேரி ஆன்ரோடு விலை ரூ.1,85,654 ஆகும்.

Ex-showroom on-road
KTM 160 Duke ₹ 1,71,126 ₹ 2,05,765

17 அங்குல வீல் பெற்று ஸ்டீல் டெர்லிஸ் சேஸை பெற்ற இந்த மாடலில் இரு பிரிவுகளை பெற்ற எல்இடி லைட்டிங் உடன் மிக நேர்த்தியாக எலக்ட்ரானிக் ஆரஞ்சு, அட்லாண்டிக் நீலம் மற்றும் சில்வர் மெட்டாலிக் மேட் என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.

5 அங்குல எல்சிடி கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு அடிப்படையான பல்வேறு அம்சங்களுடன் டர் பை டர்ன் நேவிகேஷன், கேடிஎம் கனெக்ட் வசதிகளை பெற்று முன்புறத்தில் அப்சைட் டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது.

பிரேக்கிங் அமைப்பில்  320மிமீ டிஸ்க் மற்றும் 230மிமீ பின்புற டிஸ்க் பெற்று இரட்டை சேனல் ABS கொண்டுள்ளது. சூப்பர் மோட்டோ, ஆஃப் ரோடு ஏபிஎஸ் வசதியும் உள்ளது.

கேடிஎம் 160 டியூக் நுட்பவிபரங்கள்

வகை விவரம்
எஞ்சின் 164.2cc, 1 சிலிண்டர், SOHC, லிக்விட் கூல்ட் 66 mm X 48 mm
Bore x Stroke 66 mm X 48 mm
பவர் 19 PS @ 9500 rpm
டார்க் 15.5 Nm @ 7500 rpm
கியர்பாக்ஸ் 6-ஸ்பீடு, அஸிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச்
சஸ்பென்ஷன் முன் WP USD ஃபோர்க், பின் WP மோனோஷாக்
பிரேக்  320mm/ 230mm டிஸ்க் (ABS)
டயர்கள் 110/70 – 17 FR / 140/60 – 17
எரிபொருள் டாங் 10.1 லிட்டர்
எடை 147 கிலோ (Kerb Weight)
நீளம்xஅகலம்xஉயரம்
கிரவுண்ட் கிளியரண்ஸ் 174mm
டிஸ்பிளே 5″ எல்சிடி கன்னெக்ட் வசதியுடன்
ரைடிங் மோடுகள் Supermoto ABS
டாப் வேகம் 155கிமீ
விலை (எக்ஸ்-ஷோரூம்) ₹1.85 லட்சம்

KTM 160 Duke Rivals

160cc சந்தையில் கிடைக்கின்ற யமஹா MT-15 V2 மாடலை நேரடியாக எதிர்கொள்ளுகின்ற டியூக்கிற்கு சவாலாக மற்ற மாடல்களான அப்பாச்சி 160, பல்சர் 160, எக்ஸ்ட்ரீம் 160, ஜிக்ஸர் 155 உட்பட எஸ்பி 160 போன்றவை உள்ளது.

கேடிஎம் டியூக் 160 புகைப்படங்கள்

Last Updated -Price GST 2.0 tax structure 22/09/2025

Exit mobile version