Automobile Tamilan

டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்

triumph speed 400

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்பீட் 400 பைக் மாடலின் என்ஜின் விபரம், நுட்பவிபரங்கள், நிறங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன-ரோடு விலை பட்டியல் என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

Triumph Speed 400

பஜாஜ்-டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் ஸ்பீட் 400 பைக்கில் புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ட்ரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் மைலேஜ் 30 Kmpl வழங்கும்.

ஸ்பீட் 400 பைக்கில் ரைடு பை வயர் மற்றும் ஸ்விட்ச் ஆஃப் செய்யக்கூடிய டிராக்ஷன் கட்டுப்பாடு உள்ளது. டிஸ்ப்ளேவில் ஒருங்கிணைந்த எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

ஸ்பீட் 400 பைக்கில்  புதிய டியூபுலர் ஸ்டீல் சேஸ் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பு சிறப்பான மற்றும் நிலைப்பினை ஏற்படுத்தும் கையாளுதலுக்கான உறுதிப்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்பீட் 400 மாடலின் பரிமாணங்கள் வீல்பேஸ் 1377 mm மற்றும் இருக்கை உயரம் 790 mm பெற்று 170 கிலோ எடை கொண்டுள்ளது.

43 மிமீ அப்சைடு டவுன் முன் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு 140 மிமீ பயணத்தை வழங்குகிறது.  பின்பக்கத்தில்130 மிமீ பயணக்கின்ற மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் ஆனது ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரேக்கிங் பொறுத்தவரை, ட்ரையம்ப் ஸ்பீட் 400 நான்கு பிஸ்டன் ரேடியல் காலிபர் பொருத்தப்பட்டுள்ளது, முன்பக்கத்தில் 300 mm நிலையான டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230 mm டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

ஸ்பீட் 400 பைக்கின் இரண்டு முனைகளிலும் 17 இன்ச் டயர் பொருத்தப்பட்டு டயரை பெற்றுள்ளது.

டிரையம்ப் ஸ்பீட் விலை ₹. 2.33 லட்சம் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ.10,000 குறைவாக ₹ 2.23 லட்சத்தில் கிடைக்கும்.

டிரையம்ப் ஸ்பீட் 400 நுட்பவிபரங்கள்

என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் Speed 400
வகை

Liquid-cooled, 4 valve, DOHC, single-cylinder, FI

Capacity

398.15 cc

Bore x Stroke

89.0 mm x 64.0 mm

Compression

12:1

அதிகபட்ச பவர்

40 PS / 39.5 bhp (29.4 kW) @ 8,000 rpm

அதிகபட்ச டார்க்

37.5 Nm @ 6,500 rpm

கிளட்ச்

வெட் மல்டிபிள் கிளட்ச்

கியர்பாக்ஸ்

6 ஸ்பீடு சிலிப்பர் அசிஸ்ட்

 

Speed 400  and Scrambler 400 X
சேஸ்

ஹைப்ரிட் ஸ்பைன்/பெரிமீட்டர்,

டியூபுலர் ஸ்டீல், போல்ட்-ஆன் ரியர் சப்ஃப்ரேம்

ஸ்விங் ஆர்ம்

இரட்டை பக்க, கேஸ்ட் அலுமினிய அலாய்

முன்பக்க வீல் கேஸ்ட் அலுமினிய அலாய்

10 ஸ்போக், 17 x 3 in

கேஸ்ட் அலுமினிய அலாய்

10 ஸ்போக் 19 x 2.5 in

பின்பக்க வீல் கேஸ்ட் அலுமினிய அலாய்

10 ஸ்போக், 17 x 4 in

கேஸ்ட் அலுமினிய அலாய்

10 ஸ்போக், 17 x 3.5 in

டயர் Metzeler Sportec M9RR Metzeler Karoo Street
முன்புற டயர் 110/70 R17 100/90 R19
பின்புற டயர் 150/60 R17 140/80 R17
முன்புற

சஸ்பென்ஷன்

43mm அப் சைடு டவுன் ஃபோர்க்
140mm wheel travel
43mm அப் சைடு டவுன் ஃபோர்க்
150mm wheel travel
பின்புற

சஸ்பென்ஷன்

மோனோஷாக் ப்ரீ லோட் அட்ஜெஸ்ட்
130mm wheel travel
மோனோஷாக் ப்ரீ லோட் அட்ஜெஸ்ட்
150mm wheel travel
முன்புற பிரேக் 300mm டிஸ்க்
4 பிஸ்டன் ரேடியல் காலிப்பர், ABS
320mm டிஸ்க்

4 பிஸ்டன் ரேடியல் காலிப்பர், ABS

பின்புற பிரேக் 230mm டிஸ்க் ஃபுளோட்டிங் காலிப்பர், ABS 230mm டிஸ்க் ஃபுளோட்டிங் காலிப்பர், ABS

டிரையம்ப் ஸ்பீட் 400 நிறங்கள்

2023 Triumph Speed 400 on-road Price in TamilNadu

2023 டிரையம்ப் ஸ்பீட் 400 மோட்டார்சைக்கிள் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் சென்னை விலை ₹ 2,77,845 ஆகும்.

Triumph 400 Rivals

டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கிற்கு போட்டியாக ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, மீட்டியோர் 350,  ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள், ஹோண்டா சிபி 350, ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Faq Triumph Speed 400

டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் பவர் விபரம் ?

TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க், 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் மைலேஜ் 32kmpl

டிரையம்ப் ஸ்பீட் 400 டாப் ஸ்பீடு விபரம் ?

டிரையம்ப் ஸ்பீட் 400 டாப் ஸ்பீடு 160km/hr

டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 2,77,845

Triumph Speed 400 Bike Photos Gallery

 

Exit mobile version