டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் சந்தையில் ஸ்போர்ட்டிவ் தன்மையை பெற்ற அப்பாச்சி ஆர்டிஆர் 310ல் கொடுத்துள்ள எஞ்சின், வசதிகள், விலைப்பட்டியல் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம்.
அப்பாச்சி RTR 310 எஞ்சின்
2025 அப்பாச்சி ஆர்டிஆர்310ல் மாடலில் தொடர்ந்து எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்ற அடிப்படையானவற்றில் மாற்றம் இல்லையென்றாலும், எஞ்சினுக்கான திராட்டிள் ரெஸ்பான்ஸ், மற்றும் சிட்டி பயணங்களில் சிறப்பான வகையில் பவர் வெளியிடும் விதமாக மேம்படுத்தப்பட்டு உள்ளது.
312.2cc லிக்யூடு கூல்டு எஞ்சின் 35.6hp மற்றும் 28.7Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
TVS Apache RTR 310 On-road Price
டிவிஎஸ் நிறுவன அப்பாச்சி ஆர்டிஆர் 310 தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ரூ.2.64 லட்சம் முதல் ரூ.3.39 லட்சம் வரை அமைந்துள்ளது. புதுச்சேரி ஆன்ரோடு விலை ரூ.2.60 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரை அமைந்துள்ளது.
RTR 310 Variants | Ex-showroom | on-road |
---|---|---|
RTR 310 Arsenal Black Base without QuickShifter | ₹ 2,21,240 | ₹ 2,64,006 |
RTR 310 Arsenal Black Base | ₹ 2,36,890 | ₹ 2,81,824 |
RTR 310 Fury Yellow Base | ₹ 2,36,890 | ₹ 2,81,824 |
RTR 310 Fiery Red Base | ₹ 2,41,490 | ₹ 2,87,070 |
RTR 310 Glossy Black | ₹ 2,86,690 | ₹ 3,38,690 |
RTR 310 BTO 1 (Dynamic Kit) | ₹2,54,890 | ₹ 3,02,690 |
RTR 310 BTO 2 (Dynamic Pro Kit) | ₹2,64,890 | ₹ 3,13,678 |
RTR 310 BTO 3 (Dynamic Pro Kit+Dynamic) | ₹2,82,290 | ₹ 3,32,097 |
Build to Order முறையில் வாங்கும் பொழுது Sepang Blue என்ற நிறத்தை வாங்க நினைத்தால் எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.15,000 கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
BTO (Built To Order) மூலம் டைனமிக் கிட் வாயிலாக முழுமையாக அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் இரு பக்கத்திலும், காப்பர் பூசப்பட்ட சங்கிலி மற்றும் டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு (TPMS) ஆகியவற்றைச் சேர்க்கிறது, இதன் ஒட்டுமொத்த விலை ரூ.18,000 ஆகும்.
டைனமிக் ப்ரோ கிட் சாவி இல்லாத இக்னிஷன், லாஞ்ச் கட்டுப்பாடு போன்ற ஏராளமான மின்னணு சாதனங்களைக் கொண்டு ரைடிங் மோடுகளை பெற்றதன் விலை ரூ.28,000 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 நுட்பவிபரங்கள்
வகை | விவரம் |
---|---|
எஞ்சின் | 312.2cc, 1 சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்ட் |
பவர் | 35.6 PS @ 9700 rpm |
டார்க் | 28.7 Nm @ 6650 rpm |
கியர்பாக்ஸ் | 6-ஸ்பீடு, அஸிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் |
சஸ்பென்ஷன் | முன் USD ஃபோர்க், பின் KYB மோனோஷாக் |
பிரேக் | டிஸ்க் (ABS) |
டயர்கள் | Michelin Road 5 ரேடியல் |
எரிபொருள் டாங் | 11 லிட்டர் |
எடை | 169 கிலோ (Kerb Weight) |
நீளம்xஅகலம்xஉயரம் | 1154mmx1991mmx831mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 180mm |
TFT டிஸ்பிளே | 5″ ஸ்மார்ட் கன்னெக்ட் வசதியுடன் |
ரைடிங் மோடுகள் | Urban, Rain, Sport, Track, Supermoto |
டாப் வேகம் | 150 கிமீ/மணி |
விலை (எக்ஸ்-ஷோரூம்) | ₹2.40 – ₹ 3.03 லட்சம் வரை |
2025 TVS Apache RTR 310 rivals
நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற கேடிஎம் டியூக் 390, டியூக் 250, ஹோண்டா சிபி300ஆர், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர் மற்றும் 250சிசி முதல் 400சிசி க்குள் உள்ள பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
அப்பாச்சி ஆர்டிஆர் 310 புகைப்படங்கள்
Last Updated -Price updated GST 2.0 tax structure 22/09/2025