Automobile Tamilan

யமஹா MT-15 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

yamaha mt-15 v2 on road price

ஆரம்பநிலை நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற யமஹா MT-15 மிக சிறப்பபான ஸ்டீரிட் நேக்டூ ஸ்டைலுடன் ரேசிங் அனுபவத்தை வழங்கும் மாடலின் என்ஜின், மைலேஜ், சிறப்புகள் மற்றும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

Yamaha MT 15

ஹைப்பர் நேக்டூ ஸ்டைலில் மிக சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையிலான ஸ்டீரிட் ரேசர் எம்டி-15 வி2 பைக்கின் வடிவமைப்பு மிக அக்ரோஷமாகவும், மிகவும் நம்பகமான 155cc லிக்யூடு கூல்டு என்ஜினை பெற்று இளைய தலைமுறையினருக்கு ஏற்றதாக உள்ளது.

டெல்டாபாக்ஸ் சேஸிஸை பெற்று ஆர்15 பைக்கின் என்ஜினை பகிர்ந்து கொள்ளும் எம்டி-15 பைக்கில் LC4V 155cc, லிக்யூடு கூல்டு SOHC நான்கு வால்வு, சிங்கிள் சிலிண்டர் VVA பெற்ற என்ஜின் 18.4 hp மற்றும் 7,500ஆர்பிஎம்மில் 14.1 Nm டார்க்கை வெளியிடுகிறது, மேலும், 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

(Ex-showroom TamilNadu)

Yamaha MT 15 V2 on road Price in Tamil Nadu

2025 யமஹா எம்டி 15 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, ஓசூர், புதுக்கோட்டை,  தரும்புரி, நாகர்கோவில் என மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடும்.

(All Prices on-road Tamil Nadu)

(All Prices on-road Pondicherry)

இந்த பைக்கில் டிராக்‌ஷன் கண்ட்ரோலுடன் இருபக்கத்திலும் 17 அங்குல வீல் பெற்று டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. STD வேரியண்டில் எல்சிடி கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் சில்வர் சியன் என இரு நிறங்களை கிடைக்கும் நிலையில், கூடுதலாTFT கிளஸ்ட்டர், ஹஸார்டு சுவிட்ச், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், எரிபொருள் செலவு உள்ளிட்ட வசதிகளுடன் பிரபலாமான யமஹாவின் Y-connect ஆப் செயல்பாடினை ப்ளூடூத் மூலம் இணைக்கலாம்.

பராமரிப்பு அறிவிக்கை, கோளாறுகளை கண்டறிந்து எச்சரிக்கை, ரெவ்ஸ் டேஷ்போர்டு, தனித்துவமான ரைடர் தரவரிசை அமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளது.

இந்த பைக்கின் பரிமாணங்கள் 2015 மிமீ நீளம், அகலம் 800 மிமீ, மற்றும் உயரம் 1,070 மிமீ ஆகவும் வீல்பேஸ் 1325 மிமீ ஆக பெற்று 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட யமஹா எம்டி-15 வி2 பைக்கின் இருக்கை உயரம் 810 மிமீ ஆகவும் 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்று மொத்த எடை 141 கிலோ ஆகும்.  MT15 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 44-45KMPL வரை கிடைக்கின்றது.

யமஹா எம்டி-15 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை  லிக்யூடு கூல்டு, 4 stroke
Bore & Stroke 58 mm x 58.7 mm
Displacement (cc) 155 cc
Compression ratio 11.6:1
அதிகபட்ச பவர் 18.4PS at 10,000 RPM
அதிகபட்ச டார்க் 14.2 Nm  at 7,500 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டெல்டா பாக்ஸ்
டிரான்ஸ்மிஷன் கான்ஸ்டென்ட் மெஸ், 6 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் அப்சைடு டவுன்/டெலிஸ்கோபிக்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 282 மிமீ
பின்புறம் டிஸ்க் 220 மிமீ
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 100/80-17M/C 52P ட்யூப்லெஸ்
பின்புற டயர் 140/70R17M/C 66H ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-4Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2015 மிமீ
அகலம் 800 மிமீ
உயரம் 1070 மிமீ
வீல்பேஸ் 1325 மிமீ
இருக்கை உயரம் 810 மிமீ
கிரவுண்ட் கிளியரண்ஸ் 170 மிமீ
எரிபொருள் கொள்ளளவு 10 லிட்டர்
எடை (Kerb) 141 கிலோ

 

யமஹா எம்டி-15 பைக்கின் நிறங்கள்

டிஎல்எக்ஸ் வேரியண்டில் ஐஸ் ஸ்டோரம், விவீட் வைலட் மெட்டாலிக், மெட்டாலிக் பிளாக் என மூன்று நிறங்களை பெற்றிருப்பதுடன் கூடுதலாக மோட்டோ ஜிபி மான்ஸ்டர் எடிசன், குறைந்த விலையில் மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் சில்வர் சியன் என இரு நிறங்களுடன் 6 விதமான நிறங்கள் உள்ளது.

Yamaha எம்டி-15 Rivals

இந்த மாடலுக்கு நேரடியான போட்டியை கேடிஎம் 160 டியூக் ஏற்படுத்தும் நிலையில், மற்ற மாடல்களாக எக்ஸ்ட்ரீம் 160ஆர், அப்பாச்சி ஆர்டிஆர் 160, பல்சர் என்எஸ் 160 உள்ளிட்ட மாடல்களுடன் 150cc-200cc வரை உள்ள பல்வேறு பைக்குகளை எதிர்கொள்ளுகின்றது.

Read More – KTM 160 Duke vs MT-15 V2 comparision

Faq’s Yamaha MT 15

யமஹா MT 15 V2 எஞ்சின் விபரம் ?

யமஹா எம்டி-15ல் 155cc, VVA என்ஜின் 10000rpm-ல் 18.1 bhp பவர், 7,500rpm-ல் 14.2Nm டார்க் பெற்றுள்ளது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

எம்டி 15 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

யமஹா எம்டி 15 பைக்கின் மைலேஜ் 44 முதல் 46 கிமீ வரை வெளிப்படுத்துகின்றது

Yamaha MT 15 பைக்கின் ஆன்ரோடு விலை ?

யமஹா MT 15 V2 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.1.91 லட்சம் முதல் ரூ.2.13 லட்சம் வரை கிடைக்கின்றது.

யமஹா எம்டி 15 பைக்கின் வேரியண்ட் விபரம் ?

எல்சிடி கிளஸ்ட்டர் பெற்ற எம்டி-15 மற்றும் DLX வேரியண்டில் TFT கிளஸ்ட்டருடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்கள், இறுதியாக மோட்டோஜிபி எடிசன் உள்ளது.

Yamaha MT-15 Photo Gallery

Exit mobile version