ஃபியட் அர்பன் க்ராஸ் காருக்கு முன்பதிவு ஆரம்பம்

புன்ட்டோ எவோ காரினை டிப்படையாக கொண்ட ஹேட்ச்பேக் க்ராஸ்ஓவர் ரக ஃபியட் அர்பன் க்ராஸ் காருக்கு ரூ.21,000 செலுத்தி டீலர்கள் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம். அர்பன் க்ராஸ் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

முதன்முறையாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கின் வாயிலாக காட்சிக்கு வந்த அர்பன் க்ராஸ் மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் கிடைக்கும். 140 hp பவருடன் 210 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டி-ஜெட் பெட்ரோல் என்ஜின்  மற்றும் 93 hp பவருடன் 209 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின் பெற்றிருக்கும். இரண்டிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்ககும்.

அவென்ச்சூரா க்ராஸ்ஓவர் மாடலினை போன்ற வசதிகளை கொண்டுள்ள அர்பன் க்ராஸ் காரின் முகப்பில் புதிய பம்பர் கிரில் , மேம்படுத்தப்பட்ட முகப்பு விளக்குகள் , பாடி கிளாடிங் , 16 இன்ச் அலாய் வீல் , புதிய பின்புற பம்பரினை பெற்றுள்ளது. ஏக்டிவ் மற்றும் எமோஷன் இருவிதமான வேரியண்டில் எதிர்பார்க்கப்படும் அர்பன் க்ராஸ்  டாப் எமோஷன் வேரியண்டில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , பூளூடூத் தொடர்புகள் , நேவிகேஷன் , இன்டிரியரில் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் அமைந்திருக்கும்.

அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கப்படும் ஃபியட் அர்பன் க்ராஸ் கார் விலை ரூ.7.50 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்குள் அமையலாம்.

 

 

 

Share