இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முதல் ஸ்போர்ட்ஸ் காராக வருகிற 2013 ஆம் ஆண்டின் இறுதியில் டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் கார்  வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2012 டில்லி ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.
4b41c dcavantisupercar
டிசி அவந்தி 2.0லிட்டர்   ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் 4 சிலிண்டர் (VVT)என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. என்ஜின் சக்தி 240bhp @ 5500rpm மற்றும் டார்க் 37.3kgm @ 3500rpm. 6 speed maual மற்றும் 6 speed automatic என இரண்டு ட்ரானஸ்மிஷனிலும் கிடைக்கும். காரின் அதிகப்பட்ச வேகம் 250km/hr(எலக்ட்ரானிக் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது).

இந்த கார் தற்பொழுதே 500க்கு அதிகமான முன்பதிவினை கடந்துள்ளது. இவற்றில் 300 கார்களை 2013 இறுதியில் வழங்கலாம்.
இந்த வடிவமைப்பை மும்பையைச் சேர்ந்த டிசி கார் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த வடிவமைப்பினை உருவாக்க ரூ.10 மில்லியன் முதலீடு செய்துள்ளது.
இன்னும் மூன்று மாதங்களில் 16 டீலர்களை இந்தியா முழுவதும் நியமிக்க உள்ளது.

டிசி அவந்தி கார் விலை
RS 30 லட்சம் இருக்கலாம்
Share
Published by
MR.Durai