Automobile Tamilan

உலகின் சிறந்த கார் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் -2013

2013 ஆம் ஆண்டின் உலகின் மிக சிறந்த கார்,  உலகின் பெர்பார்மன்ஸ் கார்,  உலகின் சிறந்த கார் வடிவமைப்பு,  உலகின் சூற்றுசூழல் கார் போன்றவற்றை தேர்ந்தேடுத்துள்ளனர்.
2013 World Car of the Year Volkswagen Golf
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தொடர்ந்து 4 ஆண்டுகளாக உலகின் சிறந்த காருக்கான விருதினை வென்று வருகின்றது. 2009 ஆம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப், 2010 ஆம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் போலோ, 2012 ஆம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் அப், தற்பொழுது ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப்.
இந்த வருடத்திற்க்கான முதல் தேர்வில் 42 கார்கள் பங்குபெற்றன. இறுதியாக 10 கார்கள் தேர்வு செய்யப்பட்டது. 10 காரில் இருந்து இறுதியில் 4 கார்கள் தேர்வு செய்துள்ளனர்.

இந்த கார் தேர்வு முறையானது 2012 ஜனவரி 1 முதல் 2013 மே 30 வரை உள்ள இடைவெளியில் இரண்டு கண்டங்களில் விற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த தேர்வு முறையானது சர்வதேச நடுவர் குழுவால் தேர்ந்தேடுக்கப்படுகின்றது. 23 நாடுகளில் இருந்த 66 உயர் மட்ட வாகனவியல் பத்திரிக்கையாளர்களால் தேர்ந்தேடுக்கப்படுகின்றது. இந்தியாவில் இருந்து மிக பிரபலமான ஆட்டோகார் இந்தியா ஆசிரியர்கள் ஹோர்மஸ்த் சோரப்ஜி(Hormazd Sorabjee, editor) மற்றும் ஆட்டோகார் ஷோ ஆசிரியர் ரேனுகா கிருபாலினி (Renuka Kirpalani, editor).
1974 ஆம் ஆண்டு முதல் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் விற்பனையில் உள்ளது குறிப்பிடதக்கதாகும்.

போட்டியிட்ட கார்கள் ஃபெராரி எஃப்12 பெர்லின்டா,  கம்பைன்ட் என்ட்ரி ஸ்கைன் எஃப்ஆர்-எஸ், சுப்பாரு பிஆர்இசட், டோயோட்டோ 86, ஜிடி 86, போர்ஸ்ச் பாக்ஸ்டெர்/ கேமேன், ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப், ஜாகுவார் எஃப் டைப், ரெனால்ட் ஜோ, வால்வோ வி 60 பிள்க்-இன் ஹைபிரிட் மஸ்தா 6, மற்றும் ஆஸ்டன் மார்டின் வேன்கூயூஸ்
9 வது ஆண்டில் வழங்கப்பட்டுள்ள விருதின் விவரங்கள்.
உலகின் மிக சிறந்த கார்– ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப்
உலகின் பெர்பார்மன்ஸ் கார்–போர்ஸ்ச் பாக்ஸ்டெர்/ கேமேன்
உலகின் சிறந்த கார் வடிவமைப்பு—ஜாகுவார் எஃப்-டைப்
 உலகின் சூற்றுசூழல் கார்—-டெஸ்லா மாடல் எஸ்
thanks to autocarindia
Exit mobile version