வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ள ஜீப் பிராண்டின் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் வேரியன்ட், வசதிகள் உள்பட விலை விபரங்கள் மற்றும் போட்டியாளர்களை அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற முதல் ஜீப் மாடலான காம்பஸ் எஸ்யூவி காரில் மொத்தம் 5 வகையான பிரவுகளில் கிடைக்க உள்ள நிலையில் பல்வேறு வசதிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான அம்சங்களை கொண்டதாக வரவுள்ளது.
எஞ்சின் விபரம்
காம்பாஸ் மாடலில் 170 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 160 ஹெச்பி பவருடன், 50 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது.
இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் கியராபாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 4×4 டிரைவ் , 4×2 டிரைவ் என இருவிதமான வகைகளில் கிடைக்க உள்ளது.
வேரியன்ட் விபரம்
Sport, Longitude, Longitude(O), Limited மற்றும் Limited(O) என 5 வகையான வேரியன்ட்களில் கிடைக்க பெற உள்ளது. சமீபத்தில் டீம் பிஹெச்பி தளத்தில் பிரவுச்சர் விபரங்கள் வெளியாகியுள்ளது.
ஸ்போர்ட் வசதிகள்
லாங்கிடியூட்
ஸ்போர்ட் வேரியன்ட் வசதிகளுடன் கூடுதலாக
லாங்கிடியூட் (O)
லிமிடேட்
லிமிடேட் (O)
போட்டியாளர்கள்
ஹூண்டாய் டூஸான், ஹோண்டா சிஆர்-வி , எக்ஸ்யூவி500 போன்ற மாடல்களுக்குநேரடி போட்டியாகவும் , ஃபார்ச்சூனர், எண்டேவர், பஜரோ போன்றவற்றுக்கும் சவாலாக காம்பாஸ் எஸ்யூவி விளங்கும்.
விலை
வருகின்ற ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரவுள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை ரூ. 19 லட்சம் 24 லட்சத்திற்குள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.