புதிய ஆடி ஏ6 பெட்ரோல் விற்பனைக்கு வந்தது

ஆடி ஏ6 பெட்ரோல் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரூ.45.90 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் மாடல் கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது.
ஆடி ஏ6
ஆடி ஏ6 

ஆடி A6 காரின் முந்தைய பெட்ரோல் மாடலை விட தற்பொழுது வந்துள்ள மாடலின் ஆற்றல் கூடுதலாக உள்ளது. ஏ6 மேட்ரிக்ஸ் காரின் தோற்றத்தினை ஒத்திருக்கும் பெட்ரோல் மாடலில் எஸ் லைன் பாடி கிட் மற்றும் மேட்ரிக்ஸ் எல்இடி முகப்பு விளக்கு போன்றவை இல்லை.

190எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் A6 35 TFSI 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முந்தைய மாடலைவிட 12.7 % வரை எரிபொருள் சிக்கனம் மேம்பட்டுள்ளதால் தற்பொழுது ஆடி ஏ6 கார் மைலேஜ் லிட்டருக்கு 15.26கிமீ மைலேஜ் தரும்.

மேலும் ஆடி ஏ6 காரில் 8 காற்றுப்பைகள் , அம்பியன்ட் லைட்டனிங் , ஆடி பார்க்கிங் சிஸ்டம் ப்ளஸ் , ஆடி சவுண்ட் சிஸ்டம் , க்ரூஸ் கன்ட்ரோல் என பல விதமான சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.

ஆடி ஏ6 35 TFSI பெட்ரோல் கார் விலை ரூ. 45.90 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்.)

Audi A6 35 TFSI facelift launched in India

Exit mobile version