புதிய செடான் கார்கள்- 2015

2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் செடான் கார்களை பற்றி இந்த பதிவில் கானலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ கிளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் என்டரி லெவல் சொகுசு செடான் காரான சிஎல்ஏ கார் மிகவும் சிறப்பான சொகுசு தன்மை கொண்ட காராகும். மிகவும் கவரக்கூடிய தோற்றத்தில் விளங்குகின்றது.
வருகை; 2015 ஐனவரி
விலை; ரூ.25- 35 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; ஆடி ஏ3

பிஎம்டபிள்யூ 3 சிரீஸ்

பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தின் என்டரி லெவல் சொகுசு காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் வரும் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. மேம்படுத்தப்பட்ட காரில் வெளிப்புற தோற்றம் மற்றும் உட்டகட்டமைப்பு மாற்றப்பட்டிருக்கும் மேலும் என்ஜினில் மாற்றம் இருக்க வாய்ப்புகள் உள்ளது.
வருகை; 2015 இறுதியில்
விலை; ரூ.35- 45 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; ஆடி ஏ4 , வால்வோ எஸ்60, பென்ஸ் சி கிளாஸ் மற்றும் பஸாத்

ஹோண்டா அக்கார்டு

மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய அக்கார்டு அதிகப்படியான இடவசதி நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் நவீன வசதிகளை பெற்றிருக்கும். டீசல் மாடலும் கிடைக்கலாம் மேலும் ஹைபிரிட் ஆப்ஷன் வர வாய்ப்புள்ளது.
வருகை; 2015 மத்தியில் 
விலை; ரூ.21- 26 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; கேமரி, சூப்பர்ப்

ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா

தற்பொழுது தீவரமான சோதனை ஓட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா வெளிப்புற தோற்றம் மற்றும் உட்டப்புற கட்டமைப்பில் மாற்றங்களுடன் விற்பனைக்கு வரலாம்.
வருகை; 2015 மத்தியில்
விலை; ரூ.14- 18 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; எலன்ட்ரா, அல்டிஸ் மற்றும் ஆக்டாவியா

ஃபோக்ஸ்வேகன் பஸாத்


ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலில் புதிய டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் உட்கட்டமைப்பு மற்றும் வெளித் தோற்றத்தில் மாற்றங்கள் பெற்றிருக்கும்.வருகை; 2015 இறுதியில்
விலை; ரூ.22- 31 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; பிஎம்டபிள்யூ 3 சிரீஸ், பென்ஸ் சி கிளாஸ்

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் கார் நிறுவனத்தின் வெர்னா மேம்படுத்தப்ப
ட்ட மாடலில் சஸ்பென்ஷன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல நவீன வசதிகள் மற்றும் வெளிப்புற தோற்றத்தில் மாற்றம் பெற்றுள்ளது.
வருகை; 2015 தொடக்கம்
விலை; ரூ.6.5- 11 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; சியாஸ், வென்டோ

டொயோட்டா கேம்ரி

மேம்படுத்தப்பட்ட டொயோட்டா கேம்ரி சொகுசு காரில் புதிய வசதிகள் மற்றும் உட்ப்புற கட்டமைப்பில் மாற்றங்கள் பெற்றிருக்கும்.
வருகை; 2015 இறுதி
விலை; ரூ.24- 28 லட்சத்திற்க்குள்
Exit mobile version