Automobile Tamil

புதிய டிசையர் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது

மாருதி சுசூகி டிசையர் காரின் ஃபேஸ்லிஃப்ட் அதாவது மேம்படுத்தப்பட்ட டிசையர் மாடல் ரூ.5.07 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி டிசையர்

சில கூடுதல் வசதிகளை இணைத்து சந்தையில் உள்ள போட்டியை சமாளிக்க கூடிய வகையில் புதிய டிசையர் கார் விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் என்ஜின் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கூடுதலான மைலேஜ் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது . டிசையர் டீசல் கார் மாடல் இந்தியாவிலே அதிக மைலேஜ் தரக்கூடிய காராக உருவெடுத்துள்ளது.

டிசையர் கார் மைலேஜ்

முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் சிக்கனத்தினை கொண்டு விற்பனைக்கு வந்துள்ள டிசையர் 1.2 பெட்ரோல் என்ஜின் முன்பை விட ஆற்றல் குறைக்கப்பட்டுள்ளது. 83.1பிஎச்பி (முன்பு 85.8பிஎச்பி) ஆற்றலை வெளிப்படுத்தும்.

1.3 லிட்டர் டீசல் என்ஜின் 74பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். உராய்வு இழப்பினை கட்டுப்படுத்தி கூடுதலாக மைலேஜ் தரும் வகையில் மேம்படுத்தியுள்ளனர்.

டிசையர் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 20.85கிமீ (முன்19.1கிமீ) ஆகும். இந்தியாவின் அதிக மைலேஜ் தரக்கூடிய காராக டிசையரின் டீசல் மாடல் விளங்கும். டிசையர் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 26.59கிமீ (முன் 23.4கிமீ) ஆகும். 

இரண்டு என்ஜினிலும் 5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர். மேலும் பெட்ரோல் மாடலில் 4 வேக தானியங்கி டிரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும்.

வெளிதோற்றம்

புதிய டிசையர் காரின் முகப்பு மற்றும் பின்புற பம்பர்கள் முற்றிலும் மேம்படுத்தி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முகப்பு கிரில் மிகவும் நேர்த்தியான தேன்கூடு அமைப்பின் மத்தியில் குரோம் பூச்சூக்கொண்ட பட்டையை பொருத்தப்பட்டுள்ளது. இதன் மத்தியில் சூசுகி லச்சினை பொறிக்கப்பட்டுள்ளது.

ஸ்மோக்டு முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஃபினிஷ் கொடுத்துள்ளனர். டாப் மாடலில் மட்டும் ஸ்மோக்டு முகப்பு விளக்குகள் உள்ளன. புதிய ஆலாய் வீல் மற்றும் வீல் கேப்களை பெற்றுள்ளது.

பார்க்கிங் சென்சார் , பின்புறம் பார்க்கும் கண்ணாடி எலக்டரிக்  விங்  ஃபோல்டிங் ,  என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , ஸ்மார்ட் கி வசதி அதாவது சாவியை இணைக்காமால் பாக்கெட் அல்லது கையில் இருந்தாலே வாகனம் இயக்க முடியும்.

பீஜ் மற்றும் கருப்பு வண்ணத்தினை உட்ப்புறத்தினை கொண்டுள்ளது. புதிய அப்ல்சரி பயன்படுதியுள்ளனர். மேலும் டேஸ்போர்டில் மர வேலைபாடுகளை கொண்டுள்ளது.

பூளூடூத் இணைப்புடன் கூடிய 6 ஸ்பீக்கர்களை கொண்ட ஆடியோ வழங்கபட்டுள்ளது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு மற்றும் அலைபேசி இணைப்பினை கட்டுப்படுத்த முடியும்.

பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் மற்றும் இபிடி  அனைத்து வேரியண்டுகளிலும் உள்ளது. இரட்டை காற்றுப்பைகள் டாப் மாடலான இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்டிஜ் வேரியண்டில் மட்டுமே உள்ளன.

டிசையர் கார் விலை (ex-showroom delhi)

பெட்ரோல் மாடல்

டிசையர் LXi – ரூ.5.07 லட்சம்
டிசையர் Lxi(O) – ரூ.5.20 லட்சம்
டிசையர் VXi – ரூ.5.85 லட்சம்
டிசையர் ZXi – ரூ.6.80 லட்சம்

டீசல் மாடல்

டிசையர் LDi – ரூ.5.99 லட்சம்
டிசையர் VDi – ரூ.6.85 லட்சம்
டிசையர் ZDi – ரூ.7.81 லட்சம்

Maruti Suzuki Swift Dzire Facelift Launched priced at Rs. 5.07 lakhs.

Exit mobile version