புதிய மாருதி டிசையர் கார் மைலேஜ் விபரம்..!

இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகின்ற செடான் ரக மாடலாக விளங்கும் மாருதி டிசையர் காரின் மூன்றாவது தலைமுறை மேம்படுத்தப்பட்ட டிசையர் கார் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.

அதிக மைலேஜ் தரும் கார்

  • ரூ.5.45 லட்சம் ஆரம்ப விலையில் புதிய மாருதி சுசுகி டிசையர் கார் விற்பனைக்கு வந்துள்ளது.
  • புதிய டிசையர் கார் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட மாடலாக வரவுள்ளது.
  • டிசையர் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 28.40 கிமீ தரவல்லதாகும்.

புதிய மாருதி டிசையர் காரில் விற்பனையில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனைக்கு வந்துள்ளது.. ஆனால் மைலேஜ் உள்பட சிறப்பான கையாளுமை திறனை கொண்டதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிசையர் பெட்ரோல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 22 கிலோமீட்டர் வழங்குவல்லதாகும்.

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிசையர் டீசல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28.40 கிலோமீட்டர் வழங்கவல்லதாகும்.

ஒரு லிட்டர் டீசலுக்கு 28.40 கிலோ மீட்டர் தரும் என சான்றளிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் அதிக மைலேஜ்தரும் கார் என்ற பெருமையை மாருதி டிசையர் பெற்றுள்ளது.

டிசையர் விலை பட்டியல்

வேரியன்ட் பெட்ரோல் டீசல்
LXi ரூ.5.45,000 ரூ.6,45,000
VXi ரூ.6,29,000 ரூ.7,29,000
ZXi ரூ.7,05,000 ரூ.8,05,000
ZXi+ ரூ.7,94,000 ரூ.8,94,000
VXi AMT ரூ.6,76,000 ரூ.7,76,000
ZXi AMT ரூ.7,52,000 ரூ.8,52,000
ZXi+ AMT ரூ.8,41,000 ரூ.9,41,000

முழுமையான பட தொகுப்பை காண மோட்டார் டாக்கீஸ் – டிசையர்

For more news from AutomobileTamilan, follow us on Twitter @automobiletamilan and on Facebook at facebook.com/automobiletamilan

Share