மாருதி சியாஸ் ZXi+ ஆட்டோமேட்டிக் அறிமுகம்

மாருதி சுஸூகி சியாஸ் காரின் ZXi+ டாப் வேரியண்டில் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியாஸ் VXi+ வேரியண்டில் உள்ள அதே  டிரான்ஸ்மிஷனாகும்.

நடுத்தர ரக செடான் பிரிவில் விற்பனையில் உள்ள சிட்டி , வெர்னா , ரேபிட் , வென்ட்டோ போன்ற கார்களுடன் சந்தையை பகிர்ந்துகொண்டுள்ள சியாஸ் காரில் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 91 bhp ஆற்றல் மற்றும் 130 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 4 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மெனுவல் கியரபாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் டீசல் என்ஜினில் 88.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் ஹைபிரிட் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

மாருதி சியாஸ் ZXi+ விலை ரூ.9.95 லட்சம் (சென்னை எக்ஸ்ஷோரூம் விலை)

 

Share