Categories: Car News

மாருதி சுஸூகி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது

மாருதி எர்டிகா எம்பிவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரூ.5.99 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மாருதி எர்டிகா ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் உள்ளது.

இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட எம்பிவி மாடலாக மாருதி எர்டிகா வந்துள்ளது. மேலும் எர்டிகா டீசல் மாடலில் SHVS ஹைபிரிட் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

தோற்றம்

புதிய எர்டிகா தோற்றத்தின் முகப்பில் மூன்று குரோம் ஸ்லாட்களுக்கு மத்தியில் சுசூகி லோகோ பதிக்கப்பட்டுள்ளது. பனி விளக்குகள் அறையில் குரோம் பட்டை போன்றவை இணைக்கப்பட்டுள்ளது. முகப்பு விளக்கு , பானெட்டில் எந்த மாற்றங்களும் இல்லை. பக்கவாட்டில் புதிய அலாய் வீலை பெற்றுள்ளது.
பின்புறத்தில் நீளமான குரோம் பட்டை சேர்க்கப்பட்டுள்ளது. அதன் மேலே எர்டிகா என எழுதப்பட்டுள்ளது. மேலும் ரிஃபெலக்ட்ர் சேர்க்கப்பட்டுள்ளது. டெயில் விளக்குகள் மற்றும் பின்புற பம்பரினை பதுப்பிக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் இரட்டை வண்ண டேஸ்போர்டு , 7 இஞ்ச் தொடுதிரை ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஆடியோ பூளூடூத் , யூஎஸ்பி/ஆக்ஸ் தொடர்புகள் , புதிய அப்ஹோல்ஸ்ட்ரி , எலக்ட்ரிக் ஃபோல்டிங் மிரர் , ஒன் புஸ் வின்டோ ஒட்டுநர் இருக்கைக்கு , என்விஎச் லெவல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

என்ஜின்

91 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 130என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

88.5 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் SHVS ஹைபிரிட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 200என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

மாருதி சுஸூகி எர்டிகா டீசல் மைலேஜ் லிட்டருக்கு  24.52 கிமீ மற்றும் மாருதி சுஸூகி எர்டிகா பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 17.5கிமீ ஆகும்

SHVS ஹைபிரிட் நுட்பம் ஒரு சிறப்பான மைல்ட் ஹைபிரிட் அமைப்பாகும். இந்த அமைப்பு ஸ்டார்ட்/ஸ்டாப் , பிரேக் ஆற்றலை சேமிக்க மற்றும் என்ஜினுக்கு கூடுதல் ஆற்றலை வழங்க உதவிசெய்யும்.

சிறப்பு வசதிகள்

முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் , இபிடி வசதி பேஸ் வேரியண்ட்டை தவிர்த்து மற்ற வேரியண்ட்களில் உள்ளது. ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா , ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு போன்றவை உள்ளது.

மாருதி எர்டிகா விலை விபரம்

எர்டிகா பெட்ரோல் மாடல்

 • LXi : ரூ.5.99,907
 • LXi (O): ரூ.6 ,35,339
 • VXi  : ரூ. 7,26 ,254
 • VXi AT : ரூ.8,26,257
 • ZXi : ரூ.7,85,561
 • ZXi + : ரூ.8,42,257
எர்டிகா டீசல் மாடல்
 • Ldi : ரூ.7,55,826
 • Ldi (O): ரூ7 ,62,778
 • Vdi  : ரூ. 8,26,300
 • Zdi : ரூ.8,82,540
 • Zdi + : ரூ.9,25,358
{ எக்ஸ்ஷோரூம் டெல்லி }

Maruti Suzuki Ertiga facelift launched in India

Recent Posts

பஸால்டின் இன்டீரியர் டீசரை வெளியிட்ட சிட்ரன்

சிட்ரன் இந்தியாவின் C-Cube திட்டத்தின் கீழ் வெளியிட உள்ள 4வது மாடலான பஸால்ட் (Citroen Basalt) கூபே எஸ்யூவி ஆகஸ்ட்…

1 day ago

குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தை உறுதி செய்த நிசான்

அடுத்த 2025-2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் உட்பட 4 கார்களை…

1 day ago

நிசான் X-Trail 2024 பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

ரூ.36 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற நிசானின் 2024 X-Trail எஸ்யூவி மாடலுக்கு ஜூலை 26 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ள…

1 day ago

ஆகஸ்ட் 15., மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி அறிமுகமாகின்றது

சந்தையில் கிடைக்கின்ற மூன்று கதவுகளை கொண்ட தார் எஸ்யூவி காரின் அடிப்படையில் தார் ராக்ஸ் (THAR ROXX) என்ற பெயரினை…

2 days ago

ஹீரோவின் சக்திவாய்ந்த எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் எப்பொழுது.?

இந்தியாவின் குறைந்த விலை அட்வென்ச்சர் ரக மாடாலாக வரவுள்ள மிகவும் மேம்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கினைஅடுத்த…

3 days ago

ஃப்ளிப்கார்டில் பஜாஜ் பைக்குகள் விற்பனை துவங்கியது

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் வலைதளமான ப்ளிப்கார்ட்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அனைத்து மோட்டார் சைக்கிள்களும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக…

3 days ago