ஹோண்டா சிட்டி காரில் ஏர்பேக் நிரந்தரம்

மிட்சைஸ் செடான் காரில் பிரசத்தி பெற்ற ஹோண்டா சிட்டி காரில் முன்பக்க இரட்டை ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் , இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. புதிதாக VX (O) BL வேரியண்ட் மற்றும் VX (O) வேரியண்டில் கருப்பு வண்ண இண்டிரியர் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி காரில் 119PS ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 100PS ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆகியவற்றில் கிடைக்கின்றது. பெட்ரோல் காரில் 5 வேக மெனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. டீசல் காரில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

புதிய VX (O) BL வேரியண்ட்டில் பீஜ் லெதர் வண்ண இண்டிரியருடன் ஆர்சிட் பேல் மற்றும் சில்வர் வண்ணங்களில் மட்டும் கிடைக்கும்.

டாப் வேரியண்டான VX (O) வில் கருப்பு வண்ண லெதர் இன்டிரியர் பெட்ரோல் மற்றும் டீசல் வண்ணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வேரியண்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் இபிடி , போன்றவற்றுடன் ரியர் ஐஎஸ்ஓஃபிக்ஸ் மற்றும் டாப் டெதர் சைல்டு இருக்கைகளுக்கான உபகரணங்கள் அனைத்து வேரியண்டிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

1998 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டி கார் 6 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த 4வது தலைமுறை சிட்டி கார் இதுவரை 1.60 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளது. மிட்சைஸ் செடான் கார்களான சியாஸ் , வெர்னா போன்ற கார்களுடன் சிட்டி சந்தையை பகிர்ந்து கொண்டுள்ளது.

Share