Automobile Tamilan

ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் இந்தியா கிராஸ்போலோ ஹேட்ச்பேக் காரை சில கூடுதலான வசதிகளுடன் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. டீசல் என்ஜின் மட்டுமே பொருத்தப்பட்டுள்ள கிராஸ்போலோ விலை ரூ7.75 லட்சம் ஆகும்.
1.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 75 பிஎஸ் மற்றும் டார்க் 180என்எம் ஆகும். 5 வேக மேனுவல் கியர் பாகஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
56963 volkswagencrosspolo
பல வசதிகள் மற்றும் மாற்றங்களை கிராஸ்போலோ கார் பெற்றுள்ளது. அவை முகப்பு கிரிலில் குரோம் பூச்சூ, புதுவிதமான பம்பர்கள், 5 ஸ்போக் ஆலாய் வீல், சிறப்பான வசதிகளை கொண்ட உட்புறத்தில் 75கிலோ கொள்ளவு உள்ள லக்கேஜ் டிரே, சன் கிளாஸ் வைப்பதற்க்காக குலோவ் பாக்ஸ்யில் தனி அறை போன்றவைகள் உள்ளன.
ஏபிஎஸ், காற்றுப்பைகள், இம்மொபைல்சர் போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளன. 
ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ விலை ரூ. 7.75 லட்சம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)
Exit mobile version