டட்சன் ரெடி-கோ ஸ்போர்ட் எடிசன் வருகை

வருகின்ற 29ந் தேதி டட்சன் பிராண்டில் வெளிவந்த ரெடி-கோ மாடலை அடிப்படையாக கொண்ட ரெடி-கோ ஸ்போர்ட் எடிசன் மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. டட்சன் பிராண்டில் அமோக வரவேற்பினை பெற்ற மாடலாக ரெடி-கோ விளங்குகின்றது.

கடந்ந ஜூன் மாதம் விற்பனைக்கு வந்த டட்சன் ரெடி கோ கார் விற்பனைக்கு வந்தது முதலே அமோக வரவேற்பினை பெற்ற மாடலாக சராசரியாக 3000 அலகுகளை மாதந்திரம் விற்பனை செய்து வருகின்றது. கடந்த ஜூன் மாதம்  2925 அலகுகள் ,   ஜூலையில் 3940 அலகுகள் மற்றும் ஆகஸ்டில் 3205 அலகுகள் விற்பனை ஆகியுள்ளது.

பிரசத்தி பெற்ற ரெனோ க்விட் காரின் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ரெடி கோ காரில் 799சிசி பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 54 hp மற்றும் 72 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் வரவுள்ள ஸ்போர்ட் வரையறுக்கப்பட்ட பதிப்பில் இன்ஜின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் கூடுதலான துனை கருவிகள் மற்றும் வசதிகளுடன் பம்பர் போன்றவற்றில் சில மாறுதல்கள் ,ஸ்போர்ட் பேட்ஜ் போன்றவை இடம் பெற்றிருக்கலாம்.

டட்சன் ரெடி கார் விலை விபரம்

Redi-go D – ரூ. 2.39 லட்சம்

Redi-go A – ரூ. 2.83 லட்சம்

Redi-go T – ரூ. 3.09 லட்சம்

Redi-go T(O) – ரூ. 3.19 லட்சம்

Redi-go S – ரூ. 3.34 லட்சம்

( அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் )

Datsun Redi-Go photo gallery

[envira-gallery id=”7303″]

Exit mobile version