Automobile Tamilan

இந்தியாவில் மினி கிளப்மேன் டிசம்பர் 15ல் வருகை

வருகின்ற டிசம்பர் 15ந் தேதி இந்தியாவில் பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் அங்கமான மினி கிளப்மேன் பிரிமியம் ஹேட்ச்பேக் மாடல் விற்பனைக்கு வெளியாகவுள்ளது. கிளப்மேன் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக இந்தியா வருகை உறுதி செய்யப்பட்டது.

முழுவதும் வடிவமைக்ககப்பட்ட மாடலாகவே இறக்குமதி செய்யப்பட உள்ள மினி கிளப்மேன் காரில் சர்வதேச அளவில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனையில் உள்ளது.  விற்பனையில் உள்ள மினி மாடல்களில் நீளமான மினி பிராண்டாக கிளப்மேன் விளங்குகின்றது.

மினி கிளப்மேன் என்ஜின்

முதன்முறையாக இந்தியா வரவுள்ள கிளப்மேன் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட கூப்பர் எஸ் கிளப்மேன் வேரியன்டில் 192 ஹெச்பி பவர் , 280 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.1 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 228 கிமீ ஆகும்.

2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட கூப்பர் டி கிளப்மேன் வேரியன்டில் 150 ஹெச்பி பவர் , 330 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.5 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 212 கிமீ ஆகும்.

மிக சிறிய வடிவிலான தோற்ற அமைப்பினை கொண்ட மினி கார்களில் நீளமான காராக கருதப்படும் கிளப்மேன் கார் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கிரில் , ஓவல் வடிவான ஹெட்லேம்ப் , வட்ட வடிவிலான பனி விளக்கு , ஸ்டைலிசான அலாய் வீல் மற்றும் சிறப்பான வடிவ அம்சத்தை வெளிப்படுத்தும் டெயில் விளக்கினை பெற்று விளங்குகின்றது. மேலும் கிளப்மேன் காரில் அமைந்துள்ள பின்புற கதவனாது பேரன் டோர்ஸ் என அழைக்கப்படுகின்றது.அதாவது இரு பிரிவுகளை கொண்ட கதவாகும். 5 இருக்கைகளை கொண்ட இன்டிரியரில் மிக நேர்த்தியான டேஸ்போர்டு , இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , 360 லிட்டர் பூட் ஸ்பேஸ் என தாராள இடவசதி கொண்டதாக விளங்குகின்றது.

வருகின்ற டிசம்பர் 15ந் தேதி மினி கிளப்மேன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Exit mobile version