வோக்ஸ்வேகன் அமியோ டீசல் நாளை அறிமுகம்

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் உருவான வோக்ஸ்வேகன் அமியோ காரின் பெட்ரோல் இன்ஜின் மாடலை தொடர்ந்து மேம்பட்ட டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட அமியோ கார் நாளை விற்பனைக்கு வெளியிடப்பட்ட உள்ளது.

காம்பேக்ட் ரக செடான் கார் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட வோக்ஸ்வேகன் அமியோ கார் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் அமியோ டீசல் கார் பண்டிகை காலத்தை ஒட்டி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

74 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் தவிர 7 வேக டிசிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். மேம்படுத்தப்பட்ட EA189 வெர்ஷனை பெற்றுள்ள புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன்அதிகபட்ச ஆற்றல் 115 ஹெச்பி வெளிப்படுத்தும்.

புதிய வசதிகளை காம்பேக்ட் ரக செடான் செக்மென்ட்டில்  தானியங்கி மழை சென்ஸார் , க்ரூஸ் கன்ட்ரோல் , ஆன்டி பிஞ்ச் பவர் வின்டோஸ் , ரிமோட் கன்ட்ரோல் மூலம் திறக்கும் கதவுகள் , போன்றவற்றுடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஏபிஎஸ் அனைத்து வேரியண்டிலும் , முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் அனைத்து வேரியண்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஃபிகோ ஆஸ்பயர் , மாருதி டிசையர் , டாடா ஸெஸ்ட் , ஹூண்டாய் எக்ஸ்சென்ட் , ஹோண்டா அமேஸ் போன்ற கார்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்த வல்ல மாடலாக அமியோ அமைந்துள்ளது.

அமியோ பெட்ரோல் கார் விலை விபரம்

Share