Site icon Automobile Tamilan

புதிய ஸ்கோடா சூப்பர்ப் விற்பனைக்கு வந்தது

ரூ.22.68 லட்சத்தில் தொடக்க விலையில் புதிய ஸ்கோடா சூப்பர்ப் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் வந்துள்ள சூப்பர்ப் காரில் டொயோட்டா கேம்ரி மற்றும் வரவிருக்கும் அக்கார்டு கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

MQB தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மூன்றாவது தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் காரின் டாப் வேரியண்டில் Laurent & Klement (L&K) வெர்ஷன் மாடலும் வந்துள்ளது. முந்தைய தலைமுறை மாடலை விட மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் சொகுசு தன்மை போன்றவற்றை பெற்றுள்ளது.

புதிய புராஜெக்டர் முகப்பு விளக்குகளுடன் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது. ஸ்கோடா பாரம்பரிய கிரிலுடன் அமைந்துள்ளது. பக்கவாட்டில் நேரர்த்தியான அலாய் வீல் மற்றும் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகளை பெற்றுள்ளது.

1.8 லிட்டர்  TSI பெட்ரோல் என்ஜின்

180 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும் இதன் டார்க் 320 Nm ஆகும். இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 14.12 கிமீ தரும்.

180 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும் இதன் டார்க் 250 Nm ஆகும். இதில் 7 வேக ஆட்டோமேட்டிக் DSG கியர்பாக்சினை பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 14.67 கிமீ தரும்.

2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின்

177 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும் இதன் டார்க் 350 Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் DSG கியர்பாக்சினை பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 18.19 கிமீ தரும்.

வெள்ளை , கருப்பு , கிரே மற்றும் பிரவுன் போன்ற வண்ணங்களில் கிடைக்கின்ற சூப்பர்ப் காரில் 6.5 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , 12 காற்றுப்பைகள் , சூரிய மேற்கூறை போன்ற வசதிகளை பெற்றுள்ளது.

ஸ்கோடா சூப்பர்ப் விலை பட்டியல்

{அனைத்தும் மும்பை எக்ஸ்ஷோரூம் விலை }

Exit mobile version