Site icon Automobile Tamilan

இந்திய ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட 1,500 சபாரி ஸ்ட்ரோம்கள் விநியோகம்

இந்திய ராணுவத்திற்காக டாட்டா மோட்டார் நிறுவனம், 3,192 GS800 சபாரி ஸ்ட்ரோம்கலை 4×4 ஆர்மி ஸ்பெக் SUVகளை உருவாக்க ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதில் 1,500 யூனிட்கள், டாட்டா தொழிற்சாலைகளில் இருந்து விநியோகம் செய்யப்பட்டது.

மேம்படுத்தப்பட வெர்சனாக வெளியாகியுள்ள சபாரி ஸ்ட்ரோம்கள், 60 சதவிகிதம் அதிக எடையை ஏற்றி செல்லக்கூடியது. இந்த சபாரி ஸ்ட்ரோம்கள், ஸ்டாண்டர்ட் சபாரி ஸ்ட்ரோம்களை விட 70 சதவிகித ஆற்றல்மற்றும் 200 சதவிகித அதிக டார்க்யூ கொண்டதாக இருக்கும். சபாரி ஸ்ட்ரோம்கள், சாதாரண சாலையிலும், சாலையில் இல்லாத பகுதிகளிலும் 15 மாதங்கள் வரை சிறப்பாக இயங்கும் வகையில் உருவாகப்பட்டுள்ளது.

ABS, ரெக்கவரி ஹூக்,, பனிபடர்ந்த நேரத்தில் சாலையை தெளிவாக காட்டும் லைட்கள், ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் வடிவகைகப்பட்டுள்ளது. உள்புறத்தில், அடிபடையாக இடம் பெறும் பக்கெட் சீட்கள், மொபைல் சார்ஜிங் பாயிண்ட், ஏர் கண்டிஷனிங், ஹீட்டிங், டீபாக்கர் மற்றும் பவர் விண்டோகள் பொருத்தப்பட்டுள்ளதால், இந்த வாகனங்களுக்கு குறைந்த அளவிலான பரமாரிப்பு பணிகளே போதுமானது என்பதை காட்டுகிறது.

Exit mobile version