2016 ஃபோர்டு எண்டேவர் விற்பனைக்கு வந்தது

ரூ. 24.10 லட்சம் தொடக்க விலையில் 2016 ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி காரில் இருவிதமான டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் மெனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வந்துள்ளது.

போட்டியாளர்களான ஃபார்ச்சூனர் , ட்ரெயில்பிளேசர் , பஜெரோ ஸ்போர்ட் , ரெக்ஸ்டான் போன்ற மாடல்களுக்கு கடுமையான சவாலினை ஏற்ப்படுத்தும் வகையில் வந்துள்ள என்டெவர் எஸ்யூவி காரில்  பல நவீன அம்சங்களை பெற்றுள்ளது.

தோற்றம் முந்தைய ஸ்டைலில் இருந்து புதிய டிசைன் தாத்பரியங்களுக்கு மாறினாலும் அதே கமீபிரத்தினை மிகவும் ஸ்டைலிசாக வெளிப்படுத்தும்  எண்டேவர் எஸ்யூவியில் இரட்டை பிரிவு க்ரோம் பட்டைக்கு மத்தியல் அமைந்துள்ள ஃபோர்டு லோகோ மற்றும் அசத்தலான முன்பக்க ம்பர் பாடி கிளாடிங் பேனல்கள் மிரட்டலான கம்பீரத்தை எண்டேவருக்கு தருகின்றன. டாப் வேரியண்டில் எல்இடி பகல் நேர விளக்குகளை பெற்றுள்ளது.

பக்கவாட்டில் B பில்லர் பகுதியில் மிகவும் ஸ்டைலான கோனத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிரிவு மற்றும் பக்கவாட்டு புரஃபைல் கோடுகள் 18 இஞ்ச் அலாய் வீல் போன்றவை மிக நீளமான எஸ்யூவி காரை மிக உயரமாகவும் சிறப்பாகவும் காட்டுகின்றது.

பின்புறத்தில் முந்தைய தலைமுறை மாடல் போல இல்லாமல் சிறப்பான டெயில் கேட்டினை கொண்டுள்ளது பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள க்ரோம் பட்டை டெயில் விளக்குகளுடன் இனைந்துள்ளது. மேலும் எண்டெவர் என்ற் பெயர் எழுதப்பட்டுள்ளது. சிவப்பு , கிரே , கருப்பு , சில்வர் , வெள்ளை மற்றும் புரோன்ஸ் என 6 வண்ணங்களில் கிடைக்கும்.

உட்புறத்தில் பல நவீன அம்சங்களை ஃபோர்டு இணைத்துள்ளது. குறிப்பாக மை ஃபோர்டு டாக் , பவர் பட்டன் மூலம் இருக்கைகள்  மடக்கும் வசதி ,  டெயில்கேட்டினை பவர் பட்டன் மூலம் திறக்கும் மூடும் வசதி , பனெராமிக் சூரிய மேற்கூறை , பல தகவல்களை வழங்கும் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , ரியர் வீயூ கேமரா , பார்க்கிங் உதவி , ஃபோர்டு சிங்க் 2  , பூளூடூத் , யூஎஸ்பி , ஆக்ஸ்-இன் , ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாடு பொத்தான்கள் என பல வசதிகளை பெற்ற 7 இருக்கை எண்டேவர் எஸ்யூவி காரில் டாப் வேரியண்டில் 7 காற்றுப்பைகளை பெற்றுள்ளது.

என்ஜின் 

160PS ஆற்றலை வழங்கும் 2.2 லிட்டர் TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 385Nm ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர் ஆப்ஷனில் உள்ளது.

200PS ஆற்றலை வழங்கும் 3.2 லிட்டர் TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 450NM ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது.

2.2 லிட்டர் என்ஜினில் 2 வீல் டிரைவ் மற்றும்  ஆல் வீல் டிரைவ் உள்ளது. அதுவே 3.2 லிட்டர் என்ஜினில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.

ஃபோர்டு எண்டேவர் மைலேஜ் விபரம்

எண்டேவர்  2.2L 4×2 MT Trend மைலேஜ் லிட்டருக்கு 14.12 கிமீ

என்டெவர்  2.2L 4×2 AT Trend மைலேஜ் லிட்டருக்கு 13.50 கிமீ

எண்டேவர்  2.2L 4×4 MT Trend ,  2.2L 4×2 AT Titanium இரண்டின் மைலேஜ் லிட்டருக்கு 12.62 கிமீ

எண்டேவர் 3.2L 4×4 AT Trend ,   3.2L 4×4 AT Titanium இரண்டின் மைலேஜ் லிட்டருக்கு 10.91 கிமீ

சிறப்புகள் மற்றும் பாதுகாப்பு

டாப் வேரியண்டில் பக்கவாட்டு , கர்டைன் , முழங்கால் காற்றுப்பை என மொத்தம் 7 காற்றுப்பைகள் , சூரிய மேற்கூறை , எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்கு , தானியங்கி ஹெட்லைட் போன்றவை உள்ளது. மேலும் ஆல் வீல் டிரைவ் மாடல்களில் டெர்ரெயின் மேனேஜ்மென்ட் சிஸ்டம் உள்ளது.

விலை

ஃபோர்டு எண்டேவர்  2.2L 4×2 MT Trend – ரூ. 24 ,10 ,616

ஃபோர்ட் என்டெவர்  2.2L 4×2 AT Trend – ரூ. 25,98,906

ஃபோர்டு எண்டேவர்  2.2L 4×4 MT Trend –  ரூ. 24,66,950

ஃபோர்டு எண்டேவர் 2.2L 4×2 AT Titanium – ரூ.27,05 ,772

ஃபோர்டு எண்டேவர் 3.2L 4×4 AT Trend – ரூ.

ஃபோர்டு எண்டேவர்  3.2L 4×4 AT Titanium ரூ.

( அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை )

 

[envira-gallery id=”4677″]

Share