Automobile Tamilan

2018 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காருக்கு முன்பதிவு தொடங்கியது

வருகின்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட வாய்ப்புள்ள புதிய தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காருக்கு டீலர்கள் வாயிலாக முன்பதிவு நடைபெறுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மாருதி சுசூகி ஸ்விஃப்ட்

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஹேட்ச்பேக் ரக மாடலாக விளங்கும் மாருதி ஸ்விஃப்ட் காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் பல்வேறு வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட டிசையர் கார் இந்தியாவில் கிடைத்து வருகின்றது.

தற்போது, விற்பனை செய்யப்படுகின்ற ஸ்விஃப்ட் மாடல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், டீலர்களின் இருப்பு குறைவாக இருப்பதனால் முன்பதிவு செய்கின்ற வாடிக்கையாளர்களுக்கு புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் வழங்கப்படும் என டீலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாடலில் இடம்பெற உள்ள எஞ்சின்  பியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

விற்பனையில் உள்ள மாருதி ஸ்விஃப்ட் காரை விட ரூ.10,000 வரை அதிகரிக்கப்பட்டு புதிய தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ரூ.4.99 லட்சத்தில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version