Automobile Tamilan

புதிய மாருதி ஸ்விப்ட் கார் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2018

ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாருதி ஸ்விப்ட் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 40,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.

புதிய மாருதி ஸ்விப்ட் கார்

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்ற ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான ஸ்விப்ட் காரின் மூன்றாவது தலைமுறை மாடலின் விலை விபரத்தை அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தோற்ற வடிவமைப்பு

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலுக்கு இணையான தோற்ற வடிவமைப்பினை பெற்றதாக விளங்கும் புதிய ஸ்விஃப்ட் காரின் முகப்பில் எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்குடன் வந்துள்ளது.

5 வது தலைமுறை HEARTECT பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மாடல் பி பில்லர் கருப்பு நிறத்தில் வழங்குப்பட்டு மிதக்கும் வகையிலான காட்சியை வெளிப்படுத்தும் மேற்கூரையை பெற்றிருகின்றது. முந்தைய மாடலை விட புதுப்பிக்கபட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள், பெற்றுள்ள ஸ்விஃப்ட் கார் மிக கவர்ச்சிகரமாக காட்சியளிக்கின்றது.

புதிய ஸ்விஃப்ட் முந்தைய மாடலை விட 40 மிமீ கூடுதல் அகலமும், 20 மிமீ கூடுதல் வீல்பேஸ், 24 மிமீ அதிகரிக்கப்பட்ட ஹெட்ரூம் பெற்றுள்ள இந்த மாடலின் பூட் ஸ்பேஸ் 265 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக வந்துள்ளது.

இன்டிரியர்

முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்ட புதிய கருப்பு நிற கலவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கேபினுடன், டேஸ்போர்டின் சென்டரல் கன்சோலில் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை அமைப்பில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளை பெற்றுள்ளது.

எஞ்சின்

தொடர்ந்து பழைய எஞ்சினை தக்கவைத்துக் கொண்டுள்ள 2018 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிவற்றை பெற்றதாக வந்துள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் நுட்ப விபரம்
எஞ்சின் 1197cc/1248cc
பவர் 83hp at 6000rpm/75hp at 4000rpm
டார்க் 113Nm at 4200rpm/ 190Nm at 2000rpm
கியர்பாக்ஸ் 5-speed manual/5-speed AMT
நீளம் 3840mm
அகலம் 1735mm
உயரம் 1530mm
வீல்பேஸ் 2450mm
கிரவுன்ட் கிளியரன்ஸ் 163mm
எடை 855-880kg/955-985kg
டயர் 165/80 R14/185/65 R15
பூட் கொள்ளளவு 268 litres
எரிபொருள் கலன் 37 litres
பிரேக் Disc/Drum
சஸ்பென்ஷன் Mac Pherson strut/ Torsion beam

 

2018 மாருதி சுசூகி ஸ்விப்ட் விலை பட்டியல்

வேரியன்ட் விபரம்

பெட்ரோல் வரிசை மாடல்கள் LXi, VXi, ZXi , மற்றும் ZXi+ டீசல் வரிசை மாடல்கள்  LDi, VDi, ZDi , மற்றும் ZDi+ என அறியப்படுகின்றது. தொடர்ந்து வேரியண்ட் வாரியாக உள்ள வசதிகளை அறிந்து கொள்ளலாம்.

நியூ மாருதி ஸ்விஃப்ட் LXi/LDi

5 வேக மேனுவல் கியர்பாக்ஸ்

இருபக்க காற்றுப்பைகள்

ஏபிஎஸ் மற்றும் இபிடி உடன் பிரேக் அசிஸ்ட்

ஐஎஸ்ஓஃபிக்ஸ் குழந்தைகள் இருக்கை

எஞ்சின் இம்மொபைல்ஸர்

பாடி நிறத்திலான பம்பர்

14 அங்குல ஸ்டீல் வீல்

165/80 R14 டயர்கள்

ஏசி

கியர் ஷீஃப்ட் இன்டிகேட்டர்

நியூ மாருதி ஸ்விஃப்ட் VXi/VDi

5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் /AMT

செக்யூரிட்டி அமைப்பு

வேகத்தை உணர்ந்து கதவுகள் மூடிக்கொள்ளும் வசதி

கீலெஸ் என்ட்ரி

சென்டரல் லாக்கிங்

பவர் விண்டோஸ

ஸ்டீயரிங் உடன் இணைந்த ஆடியோ கட்டுப்பாடு பொத்தான்

4 ஸ்பீக்கர்கள் உடன் AM/FM/Bluetooth/AUX தொடர்புகள்

கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் (MT only)

நியூ மாருதி ஸ்விஃப்ட் ZXi/ZDi

5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் /AMT

15 அங்குல அலாய் வில்

185/65 R15 டயர்

லெதர் சுற்றப்பட்ட இருக்கை கவர்கள்

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

டூ ட்வீட்டர்ஸ்

முன்பக்க பனி விளக்குகள்

ஸ்மார்ட் கீ வித் புஸ் ஸ்டார்ட் பட்டன்

தானியங்கி கிளேமேட் கன்ட்ரோல்

எலக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் மிரர்

பின்புற டீஃபோகர்

பின்புற வைப்பர் மற்றும் வாஸர்

பூட் விளக்கு

நியூ மாருதி ஸ்விஃப்ட் ZDi+/ZXi+

5 வேக மேனுவல் கியர்பாக்ஸ்

15 அங்குல அலாய் வில் (இரு வண்ண கலவை)

LED புராஜெக்டர் ஹெட்லைட்

LED பகல் நேர ரன்னிங் விளக்குகள்

ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா

ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை அமைப்பில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளை பெற்றுள்ளது

ஆட்டோ ஹெட்லேம்ப் மற்றும் ஃபாலோ மீ லேம்ப்

முன்பதிவு விபரம்

கடந்த சில வாரங்களாக முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 2018 ஸ்விஃப்ட் காருக்கு சுமார் 40,000 முன்பதிவுகளை பெற்றிருக்கலாம் என கூறப்படுவதனால் 3 முதல் 4 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version