Automobile Tamilan

2018 சுசூகி ஜிம்னி எஸ்.யூ.வி படங்கள் வெளியானது

இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படுகின்ற 2018 சுசூகி ஜிம்னி எஸ்.யூ.வி ரக மாடலின் படங்களை அதிகார்வப்பூர்வமாக சுசூகி மோட்டார் கார்ப்ரேஷன் வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை பின்னனியாக கொண்டு மிக நேர்த்தியான மாற்றங்களைவ பெற்றதாக வெளியாக உள்ளது.

2018 சுசூகி ஜிம்னி எஸ்.யூ.வி

வருகின்ற மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ள நான்காம் தலைமுறை சுசூகி ஜிம்னி எஸ்யூவி மாடலின் படங்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இந்தியாவில் 1985 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகின்ற ஜிப்ஸி எஸ்யூவிக்கு மாற்றாக எதிர்பார்க்கப்படுகின்ற ஜிம்னி வருகை குறித்து எவ்விதமான அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் எதிர்பார்ப்புகள் மட்டும் எழுந்துள்ளது.

முந்தைய தலைமுறையை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட மதிப்புரைகளை கொண்டு அவற்றுக்கு ஏற்ப சில மாறுதல்களை மேற்கொண்டு தொடர்ந்து தனது பாரம்பரியமான ஐந்து கிரில் ஸ்லாட்டை மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு தக்கவைத்துக் கொண்டுள்ள ஜிம்னி தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியரில் சில மாறுதல்களை கொண்டதாக படங்கள் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வெளியிடும் நோக்கில் நான்கு நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்ற ஜிம்னி எஸ்.யூ.வி மாடலில் இடம்பெற உள்ள எஞ்சின் பற்றி எவ்விதமான தகவலும் இல்லை. முந்தைய மாடலை போல குறைந்தபட்ச வசதிகளை பெறாமல் இன்டிரியரில் நவீன தலைமுறையினரெ விரும்புகின்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சொகுசு வசதிகளை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகின்ற ஜூலை 5ந் தேதி அதிகார்வப்பூர்வமாக சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ள 2018 சுசூகி ஜிம்னி எஸ்.யூ.வி குறித்த தகவலை அறிந்து கொள்ள இணைந்திருங்கள்., ஆட்டோமொபைல் தமிழனுடன்..!

2018 Suzuki Jimny image gallery

b4a4e suzuki jimny sierra
Exit mobile version