Automobile Tamilan

புதிய ஹூண்டாய் ஐ20 இன்டிரியர் டீசர் வெளியீடு – ஜெனீவா மோட்டார் ஷோ

Hyundai-i20-Interior

2020 ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஹூண்டாய் ஐ20 காரின் தோற்றம் முன்பாக வெளியானதை தொடர்ந்து தற்போது இன்டிரியர் ஸ்கெட்ச் மற்றும் என்ஜின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கிரெட்டா காரின் ஸ்டீயிரிங் வீல் போன்ற அதே அமைப்பினை ஐ20 காரும் பெற உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள இன்டிரியர் ஸ்கெட்ச் மூலம் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் இந்த மாடலில் உள்ள 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ப்ளூலிங் கனெக்ட்டிவிட்டி வசதி, ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவை பெறலாம். அதே போல காரின் டேஸ்போர்ட் லேவவுட் ஃபோக்ஸ்வேகன் இன்டிரியரின் உந்துதலை தழுவியதாக அமைந்திருக்கின்றது. இந்திய மாடலை பொறுத்தவரை ஏறக்குறைய இதே டிசைன் அம்சங்களை பெறக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச அளவில் 1.0 டர்போ பெட்ரோல் என்ஜினை மட்டும் பெற உள்ள ஐ20 கார் 100 ஹெச்பி மற்றும் 120 ஹெச்பி என இரு ஆப்ஷனில் 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டத்தை கூடுதலாக பெற்று ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் ஆப்ஷனில் கிடைக்கும். ஆனால் இந்திய சந்தையை பொறுத்தவரை தற்போது உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தொடர்ந்து வழங்கப்படலாம்.

பாதுகாப்பினை பொறுத்தவரை, சர்வதேச அளவில் பிளைண்ட்-ஸ்பாட் மோதல்-தவிர்க்கும் சிஸ்டம்,  முன்புற மோதலை தவிர்க்கும் சிஸ்டம், லேன் ஃபாலோவிங் உதவி, பின்புறத்தில் மோதுவதனை தவிரக்கும் உதவி, செயற்க்கை நுண்ணறிவு வேக வரம்பு எச்சரிக்கை போன்றவை வழங்கப்படுகின்றது.

இந்திய சந்தையை பொறுத்தவரை இந்த மாடல் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களை மட்டும் பெறும், நம் நாட்டில் கிடைக்கின்ற பலேனோ, கிளான்ஸா, டாட்டா அல்ட்ராஸ் மற்றும் ஜாஸ் போன்ற கார்களை எதிர்கொள்ள உள்ள ஐ20 விற்பனைக்கு ஜூன் மாதம் வெளியிடப்படலாம்.

Exit mobile version