Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
ரூ.10.49 லட்சத்தில் ரெனோ டஸ்ட்டர் டர்போ பெட்ரோல் விற்பனைக்கு வந்தது

ரூ.10.49 லட்சத்தில் ரெனோ டஸ்ட்டர் டர்போ பெட்ரோல் விற்பனைக்கு வந்தது

bcbb9 renault duster turbo petrol

இந்தியாவின் மிகவும் பவர்ஃபுல்லான எஸ்யூவி மாடலாக ரெனோ நிறுவனத்தின் டஸ்ட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் விற்பனைக்கு ரூ.10.49 லட்சத்தில் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற நிசான் கிக்ஸ் காரில் இந்த என்ஜின் இடம்பெற்றுள்ளது.

புதிய  டஸ்ட்டர் காரில் உள்ள 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 154 ஹெச்பி பவர் மற்றும் 254 என்எம் டார்க் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் சிவிடி (X-Tronic CVT) கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். ARAI சான்றிதழ் அடிப்படையில் மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 16.5 கிமீ மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 16.42 கிமீ ஆக இருக்கலாம்.

முன்பாக இடம் பெற்றிருந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது. 106 hp பவர், 142 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்றுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

பிஎஸ்6 ரெனோ டஸ்ட்டர் 1.5 லிட்டர் மாடல் விலை

டஸ்ட்டர் RXE – ரூ.8.59 லட்சம்

டஸ்ட்டர் RXS – ரூ.9.39 லட்சம்

டஸ்ட்டர் RXZ – ரூ.9.99 லட்சம்

1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்

டஸ்ட்டர் RXE – ரூ.10.49 லட்சம்

டஸ்ட்டர் RXS – ரூ.11.39 லட்சம்

டஸ்ட்டர் RXZ – ரூ.11.99 லட்சம்

சிவிடி கியர்பாக்ஸ்

டஸ்ட்டர் RXS – ரூ.12.99 லட்சம்

டஸ்ட்டர் RXZ – ரூ.13.59 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

டாப் வேரியண்டைப் பொறுத்தவரை, 17 அங்குல அலாய் வீல், எஞ்சின் ஸ்டார்ட்-ஸ்டாப், ரிமோட் வழியாக கேபின் ப்ரீ-கூலிங் ஃபங்க்ஷன் மற்றும் ஆட்டோ ஏசி கட்டுப்பாட்டும் அடங்கும். இது க்ரூஸ் கட்டுப்பாடு, ஏபிஎஸ் உடன் இரட்டை முன் ஏர்பேக்குகள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆகியவற்றை பெற உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பிரபலமான ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், உள்ளிட்ட மாடல்களுடன் நிசான் கிக்ஸ் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்ற டஸ்ட்டர் எஸ்யூவி மிகவும் பவர்ஃபுல்லாக விளங்குகின்றது.

Exit mobile version