Automobile Tamilan

2021 ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி காரின் அறிமுக விபரம்

8d68a 2021 force gurkha

நீண்ட காத்திருப்புக்கு பின்னர் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள மேம்பட்ட புதிய ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி காரில்  இடம்பெற உள்ள முக்கிய அம்சங்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் கோவிட்-19 பரவலின் காரணமாக தொடர்ந்து விற்பனைக்கு வெளியிடுவதனை இந்நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது.

90 ஹெச்பி பவரை வழங்குகின்ற 2.6 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் மட்டும் பெற்று 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்டிருக்கும். ஆனால் போட்டியாளரான தார் கூடுதல் பவருடன் பெட்ரோல், டீசல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக், மேனுவல் கியர்பாக்சினை பெற்று 4X4 டிரைவ் ஆப்ஷனும் உள்ளது.

ஃபோர்ஸ் கூர்க்கா தோற்ற அமைப்பில் முன்புற பம்பர் புதுப்பிக்கப்பட்ட, எல்இடி டி.ஆர்.எல், எல்இடி டெயில் விளக்கு, புதிய டிசைன் அலாய் வீல், மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஆரஞ்சு நிறம் பெற்றுள்ளது. இன்டிரியரில் மேம்பட்ட டேஸ்போர்டு கொடுக்கப்பட்டு தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டிருக்கும்.

2021 ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி காரின் விலை ரூ.10 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version